பிரபல ஜோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: இந்த வாரம் உங்கள் ராசி நாதனான செவ்வாய், சிம்மத்தில் இருந்து, குருவின் 5-ம் பார்வையை பெறுகிறார். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பால், வேலைகள் விரைந்து முடியும். மாணவர்கள் பட்ட பாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும் நிலை இருப்பதால், வேண்டாத விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாக பழகினால், வேலைகளை நிம்மதியாக செய்ய இயலும். வியாபார வட்டத்தில், சில நெருக்கடிகள் அவ்வப்போது தலை காட்டினாலும், வியாபாரிகள் புது யுக்திகளைக் கையாண்டால், வெற்றி பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுத்தால், அவர்கள் தீட்டிய திட்டங்களில் சிறிது தாமதம் உண்டாகும்.
இ(ந)ல்லறம் : சுகங்களை அள்ளித்தரும் சுக்ரன் இந்த வாரம் 8, 9 வீடுகளில் இருப்பதால், பெண்களுக்கு மகிழ்வுடன் செல்லும். எனினும், சூரியன் 8, 9-ம் இடங்களில் தங்கிச் செல்வதால், தந்தை வழி உறவுகளை சுமுகமாய் வைத்துக் கொள்ள சிறிது பாடுபட வேண்டி இருக்கும்.

ரிஷபம்: இநத வாரம், உங்கள் ராசிநாதனான சுக்ரன், 8,9 வீடுகளில் நிற்கிறார். மாணவர்களும், பொது வாழ்வில் இருப்பவர்களும், பாராட்டுக்குரிய செயல்களைச் செய்து, பரிசுகளையும், வேண்டிய அங்கீகாரத்தையும் பெறுவார்கள். பணியில் உள்ளவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், அவ்வப்போது தலை காட்டும் சிறிய பிரச்சனைகள் நீங்குவதோடு, நல்ல பெயரும் தேடி வரும். பொறுப்பான பதவியில் உள்ளவர்களுக்கு, மனதை கவலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள யோகா, தியானம் ஆகியவை கை கொடுக்கும். கலைஞர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். போட்டிகளுக்கு நடுவே வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
இ(ந)ல்லறம் : சுற்றுலா செல்ல வேண்டும், புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்ற பெண்களின் எண்ணம் ஈடேற, 6-ம் இடம் மாறப்போகும் சனி உதவிகரமாக இருப்பார். புதிய பொருட்களால், இல்லம் பொலிவு பெறும். பிள்ளைகளும் உங்கள் சொற்படி நடந்து , உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

மிதுனம்: இந்த வாரம் உங்கள் ராசி நாதனான புதன் 6-ல் பணி புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும் மாணவர்கள் தங்கள் நற் பெயரை காப்பாற்றிக் கொள்ள. கவனச் சிதறலுக்கு இடம் தராமல் இருப்பது அவசியம். செவ்வாய் 3-ல் கலைஞர்கள் அனுசரித்து நடந்து கொண்டு, புதிய ஒப்பந்தங்க ளை தன் வசம் இழுத்துக் கொள்வார்கள். வேலைப்பளுவின் காரணமாக வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று நெருக்க டியான வாரமாக அமையும். வெளி நாடுகளில் வேலை தேடுபவர்கள் நம்பிக்கைக்கு உரிய நிறுவனங்களையும், நபர்களையும் அணுகுதல் நல்லது. கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலையில் பொது வாழ்வில் இருப்பவர்கள் கடின மாக உழைக்க நேரிடும்
இ(ந)ல்லறம் : பெண்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லதுதான். எனினும் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் தேவைகளை கவனித்து விட்டால், இல்லத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் காட்டும் விசேஷ கவனம், வார இறுதியில் செல்லும் வெளியூர்ப் பயணங்களுக்கு, கை கொடுக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்கள் ராசிநாதனான சந்திரன், 12,1,2 வீடுகளில் தவழ்வதால், வரவுகள் இருந்தாலும், கூடவே செலவு களும் வந்து சேர்ந்து விடும்! எனவே வியாபாரிகள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வதே புத்திசாலித் தனம். !பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத பகை பெரிதாகாதவாறு சமா தானக் கொடியை காட்டி விட்டால், மன இறுக்கமின்றி வேலைகள் நடக்கும். நண்பர்கள் தரும் ஆதரவால், மாணவர்களின் மனதில் இரு க்கும். சலிப்பும், வெறுப்பும் குறையும். செவ்வாய் 2-ல். . பணி செய் யும் இடங்களில் வீண் வாக்குவாதம் தோன்றும் வாய்ப்பிரு ப்பதால், வேலையில் இருப்பவர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. போட்டிக்கு நடுவே கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இ(ந)ல்லறம்: சுக்ரன் 6,7 வீடுகளைத் தொட்டுச் செலவதால், இந்த வாரம் பெண்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், நல்ல பெயரை யாரோ தட்டிச் செல்லும் சூழல் நிலவும். எனவே புதிய பொறுப்பு க்க ளை எடுக்கும் முன் சிந்தனை செய்வது அவசியம். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம்.

சிம்மம்: குரு உங்கள் ராசியில் இருந்து சில நெருக்கடிகளைத் தந்தாலும், 5,7,9-ம் வீடுகளைப் பார்ப்பதால், உங்களைப் புறக்கணித்த உறவுகள் பல வகைகளிலும் உதவ முன்வருவதால், தடைப்பட்ட மங்கல காரியங்கள் நல்ல விதமாக முடியும் மாணவர்கள் வார்த்தைகளை விட, செயலில் வேகம் காட்டினால், அவர்களின் முன்னேற்றம் வளமாக இருக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் பங்குதாரர்களிடையே இருக்கும் ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வரும் லாபம் கணிசமாக உயரும். பணியில் இருப்பவர்களுக்கு இருந்த மனச் சோர்வும், கலக்கமும் விலகுவதுடன் மனதிற்கு இனிமை தரும் தகவல்களும் வந்து சேரும். கலைஞர்கள் புதிய முயற்சிகளில் துணிகரமாக இறங்கு வார்கள்.
இ(ந)ல்லறம்: திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்குகுவதால்,மகிழ்ச்சியும், பரபரப்பும் கைக் கோர்த்துக் கொள்ளும். பெண்களின் திறமைக்குள்ள அங்கீகாரம், பாராட்டும் இரண்டும் கிடைக்கப் பெறும் சூழலால், இனிய தருணங்கள் மலரும்.

கன்னி: உங்கள் ராசி நாதனான புதன் 3-ல். மாணவர்கள் கூட்டாக இணைந்து வேலை செய்து, கல்வி தொடர்பான வேலைகளை வெற்றிகரமாய் முடிப்பார்கள். செவ்வாய் 12-ல். வியாபாரிகள் தங்கள் வரவு செலவுகளில் கருத்தாக இருப்பதன் மூலம் எதிர்காலத் திட்டங்களில் நம்பிக்கையுடன் செயல் படலாம். புதிதாக வேலையில் சேர்ந்துள்ளவர்கள் வீண் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தினால் நல்ல பெயர் பெற முடியும். . கடன் வாங்குகையில் சுய தொழில் புரிபவர்கள் தன் பொருளாதார எல்லையை அறிந்து செயல்படுவது நல்லது. பொறுமையைக் கடை பிடித்தால், கலைஞர்களுக்கு குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
இ(ந)ல்லறம்: சுக்ரன் 4,5 வீடுகளில்.. நெருங்கிய உறவினரின் தலையீடு மூலம் ரத்த பந்தங்கள் இடையே இருந்த பிணக்கும், பிரிவும் மாறி மீண்டும் உறவுகள் மலரும். அத்துடன், பண வரவை சேமிப்பாக மாற்ற எடுக்கும் முயற்சிகள் சுலபமாய் கை கூடி வரும்.

துலாம்; சனி 12-ல். சிறிய உடல் உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்க்கையோடு மோதலாம். எனவே பொறுப்பான பதவி வகிப்பவர்கள் உணவு விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். சுக்ரன் 3.4 வீடுகளில். மாணவர்கள் நண்பர்கள் மூலம் அதிக நன்மைகள் பெறுவர். சுயதொழில் புரிபவர்களுக்கு சில பிரச்னைகள் இருந்தாலும், தங்கள் தைரியத்தால், நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள். இந்த வாரம் வியாபாரிகள் அதிக முதலீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். ஆசிரியர்கள் காட்டும் வழியை மாணவர்கள் பின்பற்றினால் மாணவர்களுக்கு மதிப்பெண்களைப் பெறுவது சுலபமாக இருக்கும்.  சுய தொழில் புரிபவ ர்கள் தங்கள் அன்றாட கணக்கு வழக்குகளை உடனுக்குடன் முடித்தால், புதிய திட்டங்களில் தைரியமாய், களம் இறங் கலாம்.
இ(ந)ல்லறம்: பெண்கள், எதிரிகளின் பயத்திலிருந்து விடுபடும் கால மிது. புதிய பொறுப்புகளை விருப்பமுடன் ஏற்பதால், சாதனைகளின் சொந்தக்காரராகி விடுவீர்கள். எதிலும் முனைப்புடன் ஈடுபடும் மனப்பாங்கால், ஏமாற்றம் மாறி ஏற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: உங்கள் ராசி நாதனான செவ்வாய் 10-ல் உள்ளதால், பணியில் உள்ளவர்கள், வீண் ஜம்பத்தை வளர விடாமலிருந்தால், வேண்டிய காரியங்களில், சுணக்கமின்றி செயல்பட முடியும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு, தங்கள் அணுகு முறையை மாற்றினால் வரும் நன்மையும் லாபமும், மாணவர்கள் வசமாகும். கலைஞர்கள் நல்லவர்களையும், கெட்டவர்களையும் இனங் கண்டு கொண்டால், பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளுவது எளிதாகும். வியாபாரிகள் திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி உங்களைத் தேடி வரும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சின்ன விஷயங் களுக்காக பிறர் மேல் சீறிப் பாய் வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சகாயங்கள் பெறுவது சுலபமாக இருக்கும்.
இ(ந)ல்லறம் : கேது உங்கள் ராசியில். பெண்கள் உறவுகளுடன் பேசும் போது, கிண்டல், கேலிப் பேச்சு ஆகியவை தலை காட் டாமல் பார்த்துக் கொண்டால், உறவுகளின் வருகை மனதுக்கு இதமாக அமையும்.

தனுசு: உங்கள் ராசி நாதனான குரு, 9-ல் கூடாரமிட்டிருப்பதால், மனதில் ஏற்பட்டு வந்த வீண் கவலைகள் ,சஞ்சலங்கள் யாவும் குறைந்து உற்சாகம் கூடும். மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் அதிகரிக்கும். செவ்வாய் 9-ல். பணியில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை வளர விடாதீர்கள். வீண் தொல்லைகளும் வளராது . இயந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக வேலை செய்வது அவசியம் . இந்த வாரம், பொருளாதார பின்னடைவு குறைவதால், அதிருப்தியான சூழல் மாறி, வியா பாரிகள், பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். 12-ல் ராகு, முதியவர்களும், விளையாட்டு வீரர்களும் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது. கலைஞர்கள் பணி புரியும் சூழல் மனதிற்கு உகந்ததாய் இருக்கும் .
இ(ந)ல்லறம்: சூரியன் 12,1 வீடுகளில் பெண்கள், அக்கம்பக்கம் உள்ளவர்களால் மனச்சங்கடம் பட நேரிடும் வாய்ப்பிருப்பதால், தேவையில்லாமல் விருந்து உபசாரம் என்று வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளவும்.

மகரம்: உங்கள் ராசி நாதனான சனி 9-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் உணவு, தூக்கம், ஓய்வு இவை மூன்றிலும் காட்டும் கவனத்திற்கேற்றவாறு, இந்த வாரம் அமையும். செவ்வாய் அஷ்டமத்தில். வியாபாபாரிகள் பணப் பரிமாற்றம் தொடர்பாக வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும். ,கலைஞர்களின் பேச்சில் உள்ள மிடுக்கு பிறரின் மதிப்பை சம்பாதித்துத் தரும். இந்த வாரம் மாணவர்களுக்கு சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் வந்து போகும். சிறு தொழில் புரிபவர்கள் தேவையில்லாமல் பணம் கைமாற்றாய் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்து விட்டால், மனத்தாங்கல் தோன்றாது. சுய தொழில் புரிபவர்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தக்க மாற்றங்கள் உருவாகும்.
இ(ந)ல்லறம்:: 11-ல் இருக்கும் ராகு, இந்த மாதம் பெண்கள் பங்கு கொள்ளும் விழா, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் பட்டியலை அதிகமாக்குவார். அத்துடன் கலைத் துறையில் இருக்கும் பெண்களுக்கு விசேஷ சலுகைகள் கிடைக்கும் .

கும்பம்:: உங்கள் ராசி நாதனான சனி 9-ல் மாணவர்கள் அடுத்தவர்களுக்காக, அதிகம் உழைத்தாலும், நல்ல பெயர் என்பது இருக்காது. பண விவகாரங்களில், புதியவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் சுய தொழில் புரிபவர்கள் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். இந்த வாரம் தேடி வரும் சலுகைகளை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வது வியாபாரிகளின் கையில் தான் உள்ளது. கலைஞர்களுக்கு நல்ல உள்ளங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பதால், மகிழ்வுடன் விளங்குவார்கள் பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. மன உளைச்சலால், வேலையில் இருப்பவர்களின் இயல்பு வாழ்க்கை சற்றே மாறிப் போகலாம்.
இ(ந)ல்லறம்:: சுக்ரன் 11.12 வீடுகளில் உலா வருவது போல், இந்த வாரம், பெண்களின் வாழ்விலும் மகிழ்ச்சி உலா வரும். அத்துடன் ஆக்கப் பூர்வமான எண்ணங்களுக்கு உரிய முயற்சிகள் சிறந்த முறையில் வடிவாக்கம் பெறும்.

மீனம்: உங்கள் ராசி நாதனான குரு 6-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். செவ்வாய் 6-ல். பணியில் உள்ளவர்களுக்கு இழுபறியாய் இருந்த பல காரியங்கள் சடுதியில் முடிவதால் மகிழ்வுடன் விளங்குவார்கள் மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனமாக இருத்தல் நல்லது. சனி 8-ல். வியா பாரிகள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்குள் வாழ்வது என்பது எளிதாகும். பொது வாழ்வில் உள்ளவர்களும், பிற பணியாளர்களிடம்,தங்கள் கோபத்தை வெளிக் காட்டாமலிருந்தால், அனுசரணையான முறையில் வேலைகள் நடைபெறும். இந்த வாரம் கலைஞர்கள், எந்த சூழலிலும், சலனங்களுக்கு இடம் கொடாமல் மன உறுதியுடன் இருப்பது அவசியம்.
இ(ந)ல்லறம்: 3-ல் இருக்கும் கேது பெண்களுக்கு தெளிவான சிந்தனையையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் தருவார். மேலும் பணியில் இருக்கும் பெண்கள் பல நாட்களாக எதிர்பார் த்திருந்த பண வரவு, தகுந்த சமயத்தில் கிடைக்கும்

 

ஜோதிடரைப் பற்றி அறிந்து கொள்ள : https://www.vallamai.com/qa/11583/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *