இலக்கியம்கவிதைகள்

நல்ல காட்சிதான்

செண்பக ஜெகதீசன்

நீந்திக் கரை சேர்ந்தமைக்கு

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது

நிலா..

முப்பது நாள் முயற்சி

முழுமை பெற்று விட்டதால்

முகத்தில் பூரிப்பு…

அழகைப் பார்த்தாலே

அக்கம் பக்கத்தில்

ஆரவாரம்தானே-

மேக உரசல்கள்,

மின்னும்

நட்சத்திர பல்லிளிப்புகள்..

நடக்கட்டும்-

நல்ல காட்சிதான் நமக்கு…!

 

படத்திற்கு நன்றி:   http://www.123rf.com/photo_2286955_full-moon-among-stars.html    

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    கவிஞருக்கு நல்ல காட்சி! படிப்பவருக்கு நல்ல கவிதை. கவிதை உலகில் நிலா எப்போதும் அட்சய பாத்திரம்தான்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க