உன்னதமானவன் திரைப்படம் – செய்திகள்

0

ஸ்ரீ சுவாதி கிரியேஷன்ஸ் என்னும் புதிய நிறுவனம் உன்னதமானவன் என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் பிரம்மாண்ட முறையில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கதாநாயகன் பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு, சிங்கம் புலி, மனோபாலா, ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதுரையை மையமாக வைத்து எடுத்த வெற்றிப்படங்களின் வரிசையில் இதுவும் வெற்றியடையும். காதலின் வேறு ஒரு பரிமாணத்தை சொல்லும் இது ஒரு புது கதைக்களம் மதுரை, திண்டுக்கல் சுற்றியுள்ள அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. காமெடிக்கு கஞ்சா கருப்பும், சிங்கம்புலியும், போட்டி போட்டு கலக்கியிருக்கிறார்கள்.

கதைச் சுருக்கம்: ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்கிறாள். அவன் மனதில் இவள் இடம்பிடித்தாளா? அவன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான் என்பது திரைக்கதை.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரபா மனநலம் பாதிக்கப்பட்டது போல் மூன்று மாதமாக தாடி வளர்த்துக்கொண்டு தன்னை கேரக்டராகவே மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.

சின்னாளப்பட்டியில் திருவிழா ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கிழிந்த அலங்கோல நிலையில் நடித்துக் கொண்டிருந்த கதாநாயகன் இளைப்பாற கோவில் வாசலில் உட்கார்ந்திருக்கும் வேளையில் அவரை பிச்சைக்காரன் என நினைத்து பொது மக்கள் பிச்சை போட்டு இருக்கிறார்கள். அதை அப்படியே கொண்டு வந்து தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் காட்டி வருத்தப்பட, இது கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என அனைவரும் பெருமிதப்பட்டனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *