கடிதங்கள்
தி.ந.இளங்கோவன்
சொல்லம்புப் பாதைகள் ..
சோக நீர் வயலின்
வடிகால் வாய்க்கால்கள்..
பறந்து களைத்த பருந்தின்
இறக்கைப் படபடப்புகள்..
உயவிழந்த வண்டியின்
உரசல் முனகல்கள் ..
புத்தாற்று வெள்ளத்தின்
புன்சிரிப்புச் சிதறல்கள்..
உரசும் மூங்கில்களின்
உணர்ச்சிப் பொறிகள்..
அக்காக் குருவியின்
அன்புக் கதறல்கள்..
நெருப்பில் வெடிக்கும்
கொட்டாங்கச்சிச் சிதறல்கள்..
பதுங்கு நரியின்
பகல் வேஷங்கள்..
காதல் நிலவின்
கவின்மிகு ஒளிப் பொழிவுகள்..
எண்ணிலடங்கா அர்த்தம் சுமக்கும்
கடிதங்கள் முன்பெல்லாம்
அஞ்சலட்டைகளாய்..
இப்போதோ
மின்னஞ்சல்களாய்..
படத்திற்கு நன்றி: http://www.postalstationery.org/html/india_post_card_of_1902.html
நன்று.
நல்ல
சொல்லாட்சி..
வெல்க…!
அன்புடன்,
-செண்பக ஜெகதீசன்…
‘டக்’ என்று பாயிண்ட் மேட். மின்னஞ்சல் தந்தி அடிக்கறமாதிரி. மடலாடல் இலக்கியம். நம்ம இளங்கோவன் சொல்வது போல், இப்ப வேண்டப்பட்டவர்களுக்குக் கடுதாசி போகுது. நன்றி இ ~ இ.
வாழ்த்திய இருவருக்கும் நன்றி !