யாதும் ஊரே.. யாவரும் கேளீர்!
நறுக்.. துணுக்… (11)
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உயரிய குறிக்கோளுடன் வாழும் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கையின் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கைப் பயணம் சென்றிருந்த கலாம், தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் 2013ம் ஆண்டுக்குள் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, இத்திட்டத்தை செயல்படுத்த தான் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது அவருடைய உயர்ந்த உள்ளத்தையும் , மனிதாபிமானத்தையும் மீண்டும் நிரூபித்துள்ளது. சகிப்புத்தன்மையும், கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் சிறப்பான சமூகத்தை உருவாக்கும் என்றும், பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்ற அவருடைய பேச்சும் குறிப்பிடத்தக்கது!
படத்திற்கு நன்றி :
http://www.picsearch.com/pictures/Leaders%20and%20politicians/Abdul%20Kalam.html