வார ராசி பலன் : ஜனவரி 22 முதல் 29 வரை
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: குரு 1-ல். வியாபாரிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஒப்பந்தங்கள் போடுவதைத் தவிர்க்கவும். 2-ல் கேது. பணியில் இருப்பவர்களுக்கு செலவினங்கள் கூடும் வாய்ப்பிருப்பதால், வீண் செலவுகளை சுருக்குவது அவசியம். செவ்வாய் குரு வின் பார்வையைப் பெறுவதால், வியாபாரிகளுக்கு ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும், வேலைகள் நடக்க தொழிலாளர்கள் உதவி புரிவார் கள். 7-ல் சனி. பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி, வீண் பிரசசனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். 8-ல் ராகு. சுய தொழில் புரிபவர்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெற தகுந்தபடி திட்டம் இட்டு வேலை செய்யவும். 10-ல் சூரியன், புதன். மாணவர்கள் வீண் சந்தேகங்களை ஒதுக்கி துணிச்சலுடன் பணியாற்றினால்.அதிக மதிப்பெண்களோடு நல்ல பெயரையும் பெறலாம். 11-ல் சுக்ரன். கலைஞர்களுக்கு , அவர்களின் கலைத் திறமைக்கு உரிய அங்கீகாரத்தோடு , புதிய வாய்ப்புகளும் கிட்டும்.
இ(ந)ல்லறம்: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால், இல்லத்தில், மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும் பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்பு இருப்பதால், பெண்கள் பிள்ளைகளிடம் தேவைக்கதிகமாகப் பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்: 6-ல் சனி. சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள் . குரு 12-ல். இந்த வாரம் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், பெரும்பாலான பணம் கடனுக்கே செலவாகிவிடும். கேது 1-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள் வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்..செவ்வாய் 4-ல். எவ்வளவுதான் உதவி செய்தாலும், பணியில் உள்ளவர்களுக்கு, உடன் வேலை செய்பவர்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் அவ்வளவாய் இராது .7-ல் ராகு. பொறுப்புகளை வகிப்பவர்கள், திட்டமிட்டு வேலை செய்தால், வேலைச்சுமை ஓரளவு குறையும். 9-ல் சூரியன், புதன். மாணவர்கள், வீண் இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். 10-ல் சுக்ரன். கலைஞர்கள் வேண்டாத தொல்லைகளினால் மனவேதனை அடையும் வாய்ப்பிருப்பதால், பேச்சில் கவனமாக இருப்பது நல்லது.
இ(ந)ல்லறம்:: பணியில் இருக்கும் பெண்கள், உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போனால், வீண் மனக் கசப்புகள், வேலை தேங்கிப்போகுதல்-ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். அத்துடன், எதிர்பாராத செலவுகளால், இந்த வாரம் சேமிப்புகள் குறைந்து , செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்: 3-ல் செவ்வாய். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் நஷ்டம் குறைய திறமை கை கொடுக்கும்.5-ல் சனி. கலைஞர்கள் , தன்னுடைய பணிகளில் கவனமாக இருந்தால்தான், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். 6-ல் ராகு. . பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சரி வர செய்து, தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்வர். 8-ல் சூரியன், புதன். சுய தொழில் புரிபவர்கள் தங்கள் இலக்கை அடைவதில் உறுதியாக இருந்தால், உயர்வு நிச்சயம். பணியில் உள்ளவர்களுக்கு . வேலைப்பளு கூடினாலும், உடன் இருப்பவர்கள், தக்க சமயத்தில் கை கொடுக்க முன் வருவதால், நிலைமையை ஓரளவு சமாளித்து விட முடியும். 9-ல் சுக்ரன். மாணவர்களுக்கு ஆட்டம்,பாட்டம் என்று பொழுது உல்லாசமாய் செல்லும். 11-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த, வங்கி உதவி தக்க சமயத்தில் கிட்டும். 12-ல் கேது. முதியவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
இ(ந)ல்லறம்: பெண்களுக்கு உறவுகளால் சில அனுகூலங்கள் வந்து சேரும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்படாமலிருக்க , பணியில் இருக்கும் பெண்கள் எந்த சூழலிலும் பக்குவமாக நடந்து கொள்வது புத்திசாலித்தனம்
கடகம்: 8-ல் சுக்ரன். இந்த வாரம், மாணவர்கள் சுமையாய் தோன்றிய பணியை சவாலாய் எடுத்து செயல்பட்டு பாராட்டு பெற்று மகிழ்வர். 11-ல் கேது. புதுப்புது திட்டங்கள் மூலமாக வியாபாரிகள் செய்யக்கூடிய மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் வரவையும், லாபத்தையும் அதிகப்படுத்தும்.2-ல் செவ்வாய். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு , வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், தங்கள் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துவது முக்கியம். 4-ல் சனி. பணியில் இருப்பவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிறிய தவறுகளும் மற்றவர்களின் பார்வையில் பெரிதாகத் தெரியக் கூடும். 5-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள் அரசாங்க கெடுபிடிகளுக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், கணக்கு வழக்குகளை சீராய் வைப்பதில் கவனம் செலுத்தவும். 7-ல் சூரியன், புதன். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நண்பர்களால் செலவுகள், சங்கடங்கள் வந்து நீங்கும்.
இ(ந)ல்லறம்: விலை உயர்ந்த ஆடைவகைகள், இல்லத்தை அழகு படுத்தும் பொருட்கள் ஆகியவை பெண்கள் வசமாகும் .குடும்பம் சீராக செல்ல, குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெண்கள் முதலிடம் கொடுப்பது நல்லது.
சிம்மம்:9-ல் குரு. ..சுய தொழில் புரிபவர்கள், கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். 3-ல் சனி. பொது வாழ்வில் உள்ளவர்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். 6-ல் சூரியன், புதன். வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பதோடு, புதிய ஒப்பந்தங்களுக்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெறும். 4-ல் ராகு. மாணவர்கள், காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். 7-ல் சுக்ரன். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். 10-ல் கேது. பணியில் இருப்பவர்கள், அலுவலகத்தில், வீண் பேச்சுகளைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். 9-ல் செவ்வாய் உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புகளை அளிப்பது அவசியம்.
இ(ந)ல்லறம்: பெண்கள் குழப்பங்களிலிருந்து விடுபட, அனுபவம் உள்ளவர்கள் காட்டும் வழியைப் பின்பற்றுவது நல்லது. அத்துடன் உடல் நலத்தில் தகுந்த அக்கறை காட்டினால், பணி நிமித்தம் மேற் கொள்ளும் பயணங்களில் சோர்வு எட்டிப்பார்க்காமலிருக்கும்.
கன்னி: 2-ல் சனி. இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, வரவும், செலவும் சமமாக இருப்பதால், வீண் செலவுகளை குறைப்பது அவசியம். 3-ல் ராகு. .வியாபாரிகளின் திட்டங்களுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைப்பதால், புது முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் 5-ல் சூரியன், புதன். பணியில் இருப்பவர்கள் , தேவையில்லாமல் அதிக பரபரப்புக்கு இடம் கொடுத்தால், அதிக பதற்றமும் கூடவே வந்து சேரும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.. 6-ல் சுக்ரன். சுய தொழில் புரிபவர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். .8-ல் குரு. வழக்குகளில் இருந்த இழுபறியான நிலைமை மாற , வீடுகளை வாங்கி விற்பவர்கள் அதிகமாக பாடுபட வேண்டி இருக்கும். 9-ல் கேது. பொறுப்பினை உணர்ந்து வேலை செய்தால் மட்டுமே, கலைஞர்கள் தங்களுக்கு உரிய சலுகைகளைப் பெறலாம். 12-ல் செவ்வாய். புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்கள், பொறுப்புகளை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். . .
இ(ந)ல்லறம்:: பெண்கள் கண்ணில் பட்ட பொருளையெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால், வீண் செலவு தானே குறைந்து விடும். உறவுகளின் வேண்டாத பேச்சையும், கேலியையும் தவிர்க்க, பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனம் வைப்பது நல்லது.
துலாம்: ராசியில் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள், எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் முன் தன்னுடைய நிறை குறைகளை கணக்கில் கொண்டு முடிவெடுப்பது அவசியம். 2-ல் ராகு. பணியில் இருப்பவர்களுக்கு, உடன் இருப்பவர்களால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், பண விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 4-ல் சூரியன், புதன். வீண் அரட்டை, ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொள்ளாதிருந்தால், கல்வியில் கவனம் செலுத்துவது சுலபமாக இருக்கும். 5-ல் சுக்ரன். சவாலான வேலைகள் மூலம் கலைஞர்களுக்கு புகழேணியில் ஏறும் வாய்ப்பு வந்து சேரும். 7-ல் குரு. வியாபாரிகளுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் லாபகரமாக அமைய, பங்குதாரர்கள் உதவி செய்வார்கள். .8-ல் கேது.சுய தொழில் புரிபவர்கள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்கள் மூலம் முழுமையான லாபமும் நல்ல பெயரும் பெறலாம். 11-ல் செவ்வாய். கைவினை கலைஞர்கள் கடன் தொல்லையால் கலக்க மடையும் நிலை மாறி விடும்
இ(ந)ல்லறம்: கர்ப்பிணிப்பெண்கள் ஒவ்வாமை உண்டாக்கக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பதுடன், தேவையான மருத்துவ பரிசோதனைகளையும் செய்வது அவசியம். பணியில் இருப்பவர்கள் ஏனோதானோவென்று வேலை செய்தால், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும்.
விருச்சிகம் : 1-ல் ராகு.கடன் சுலபமாக அடைபட பொதுவாழ்வில் உள்ளவர்கள், வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். 3-ல் சூரியன், புதன். குரு. வியாபாரிகள், சரக்கு வினியோகத்தில் இருக்கும் சிறிய குறைபாடுகளை தீர்ப்பதில் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமலிருக்கும். 4-ல் சுக்ரன். கலைஞர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, தங்கள் திறமையை செம்மைப்படுத்தி, லாபத்தைப் பெறுவர். 6-ல் குரு. வீணான வார்த்தைப் பிரயோகம், உறவுகளின் நடுவே விரிசலை உண்டாக்கிவிடும். என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவும்.. .7-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள், யோசனை செய்த பின் பிறருக்கு வாக்குறுதிகளை அளிப்பதே புத்திசாலித் தனம் . 10-ல் செவ்வாய். வீடு, மனைகளை வாங்கி விற்பவர்கள், பணம் கொடுக்கல் வாங்கலை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களை தவிர்த்து விடலாம். 12-ல் சனி. பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்த்தவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே.
இ(ந)ல்லறம் : பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கையில் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. தந்தை வழி உறவில் இருந்த இறுக்கமான மனநிலை மாறுவதால், கலகலப்பாக பொழுது செல்லும். புதிதாக வேலையில் சேர்ந்துள்ள பெண்கள், தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படலாம்
தனுசு: 5-ல் குரு. வியாபாரிகள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை துரிதபடுத்தி லாபம் காண்பர் . 2-ல், சூரியன், புதன். .பணியில் இருப்பவர்கள் தங்களைத் தேடி வரும் பொறுப்புகளைத் தகுந்த வழிகாட்டுதலுடன் ஏற்றுக் கொள்வது அவசியம். 3-ல் இருக்கும் சுக்ரன், கலைஞர்களை , சுவையான உணவு, புதுமையான பொழுது போக்கு ஆகியவற்றை அனுபவிக்க வைத்திடுவார் . 6-ல் கேது. சுய தொழில் புரிபவர்களுக்கு, வங்கிக் கடன் தொடர்பாக இருந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். 9-ல் செவ்வாய். மாணவர்கள் கேளிக்கை பக்கம் திரும்பாமலிருந்தல், தேர்வு நேரங்களில் உண்டாகும் வீண் நெருக்கடிகளைத் தவிர்த்து விடலாம் 11-ல் சனி. நிரந்தர வேலை இல்லையே என்று வருந்தியவர்களுக்கு, நிரந்தர வேலை கிட்டும். 12-ல் ராகு. ஆலைகளில் வேலை செய்பவர்கள், விலையுயர்ந்த மின் சாதனங்களை கவனமாக கையாண்டால் வீண் விரயங்களைத் தவிர்த்துவிடலாம்.
இ(ந)ல்லறம்:: பெண்கள் அக்கம் பக்கம் பொருட்களை கொடுப்பதில் கவனமாய் இருந்தால் எந்த தொல்லையும் தோன்றாது. சிறிய உடல் உபாதைகள் பெண்களின் இயல்பு வாழ்க்கையோடு மோதலாம். எனவே அவர்கள் உணவு விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம்.
மகரம்: 1-ல் சூரியன், புதன். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய வேலைகளை முடிக்க, அதிக நேரம் பாடுபட வேண்டி இருக்கும். 2-ல் சுக்ரன். கலைஞர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு நண்பர்கள் துணையாய் இருப்பார்கள் 4-ல் குரு. இந்த வாரம் வியாபாரிகள் கையில் வந்து சேரும் என்று எதிர்பார்த்த ஒப்பந்த வாய்ப்புகள் சற்றே தள்ளிப் போகக் கூடும். 5-ல் கேது. மாணவர்கள் முனைப்புடன் பாடங்களில் கவனம் செலுத்தி வந்தால், தேர்வுகளை பயமின்றி எழுத முடியும். 8-ல் செவ்வாய். சுயதொழில் புரிபவர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம் 10–ல் சனி. பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்புகளையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் நல்லது 11-ல் ராகு. அரசு பணியில் இருப்பவர்கள் நிலுவையில் உள்ள சம்பள உயர்வு பற்றி நல்ல தகவல் பெறுவார்கள்.
இ(ந)ல்லறம்: இந்த வாரம் பெண்களுக்கு கையில் சரளமான பணப்புழக்கம் இருக்கும். பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடுக்காமலிருந்தால், வீண் தொல்லைகளை கட்டுக்குள் வைப்பதோடு, வேலைகளையும் விரைவில் முடித்து விடலாம் .
கும்பம்: 1-ல் சுக்ரன். கூட்டுத் தொழிலில், தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபா ரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். 3-ல் குரு. பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன் பட நேரிடும் 4-ல் கேது. பொறுப் பில் இருப்பவர்கள், கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள்வது அவசியம். 7-ல் செவ்வாய். மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட்டால், வீண் சர்ச்சை, விவாதம் ஆகியவை எழாது. 9-ல் சனி. பணம் கொடுப்பது, வாங்குவது இரண்டிலும் கண்டிப்போடு கனிவையும் சேர்த்துக் கொண்டால், பொது சேவையில் உள்ளோர்களின் பணி தடங்கலின்றி நடை பெறும். கேது 10-ல். கலைஞர்கள் உடனிருந்து தொல்லை செய்பவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதைக் கடைப்பிடிக்க, கட்டுக்கதை புரளி ஆகியவை புதிதாய் முளைக் காமலிருக்கும் . 12-ல் சூரியன், புதன். இயந்திரங்களின் பழுதை நீக்கும் பணியில் இருப்பவர்கள் , தகுந்த பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம்.
இ(ந)ல்லறம்: இந்த வாரம், நட்பு, விருந்து, பொழுது போக்கு என்று . பிள்ளைகள் வெளி யில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெண்கள் பிள்ளைகளின் நடவ டிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர் .
மீனம்: 2-ல் உள்ள குரு, மங்கல காரியங்களைப் பேசி முடிவு செய்து விடும் அளவுக்கு முன்னேற்றத்தை தருவார். 3-ல் இருக்கும் கேது, வியாபாரிகள் தொட்ட விஷயங்கள் மூலம் வரும் லாபம், நல்ல பெயர் இரண்டையும் இரட்டிப்பாக்குவார். 6-ல் செவ்வாய். உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும் . 8-ல் சனி. மாணவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எவரையும் நம்பி ஏமாறாதீர்கள். 9-ல் ராகு. . வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது . சூரியன், புதன் 11-ல். பொதுவாழ்வில் இருப் பவர்களின் பெயர், கௌரவமான பதவிக்கு சிபாரிசு செய்யப்படும். 12-ல் சுக்ரன். கலைத்துறையில் இருப்பவர்களின் புகழைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பிருக்கும்.
இ(ந)ல்லறம்: : பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். எனவே பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். பெண்கள் தங்கள் அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடித்தால், மன உளைச்சலின்றி இருக்க முடியும்