கடவுளைப் பிரித்த மனிதர்கள்

ஜெ.ராஜ்குமார்

மனிதருக்குள்
வெவ்வேறு முகம் இருக்கலாம்
வெவ்வேறு மனம் இருக்கலாம்…

ஆனால்
‘மதம்’ என்ற பெயரில்
மனிதன்
கடவுளையே பிரித்துள்ளானே
அந்தந்தச் சமயத்துக்கு
ஏற்றாற்போல்!

கடவுள் என்ன
பிரிக்கக் கூடிய சக்தியா?!
இல்லை – ஒவ்வொரு மதத்தைச்
சார்ந்த மக்களை…
அம்மதத்தின் கடவுள்தான்
தனித்தனியே படைத்தாரோ?!

மதி கெட்ட மனிதனே
மதத்தை தவிர்த்து
கடவுள்
ஒன்றுதான் என உணரு…!
உன் ஆன்மா தூய்மையாகும்
உனக்கு இந்த பூமி சொர்க்கமாகும்!

 

படத்திற்கு நன்றி: http://sor2011anleandbesinikua.wordpress.com/religious-expression-in-australia

1 thought on “கடவுளைப் பிரித்த மனிதர்கள்

  1. கருத்து செழுமையாக இருந்தாலும், கவிதையாக்கம் செம்மையில்லை.. இன்னும் முயற்சி தேவை. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.. வெல்க உம் முயற்சி !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க