இன்னம்பூரான்

1.11: ககன உலா வரும் மேகக் கூட்டங்களை, விமானத்திலிருந்து பார்த்தால், அவை அங்குமிங்கும் திரும்பித், திசை மாறி, உரு மாறி, வாயு போகும் போக்கில் செல்வதைக் காண்பீர். சிந்தனையும் அவ்வாறே. 

1.12: ஒரு திருப்பு முனை. அன்று ஒரு பேச்சு எழுந்தது. கட்டாய ராணுவச் சேவை இளைஞர்களுக்கு நன்மை பயக்குமா? அதைப் பற்றி அறிய உலகிலேயே முதலில் எழுதப்பட்ட ராணுவ சாத்திரம் படிக்க வேண்டும். ஸன் ட்ஸு என்ற சீன ஞானி 25 நூற்றாண்டுகளுக்கு முன் எழுதியது என்று சொல்கிறார்கள்.  

1.13: பேசும் சாத்திரமது. பசுமரத்தாணி. உள்ளங்கை நெல்லிக்கனி. கண்கூடு. ஒரு கண் பார்க்கலாமா?  ஆங்கில மொழி பெயர்ப்பு: லயனல் கைல்ஸ்~1910. 

1.14: நமது சொல்லாடலில் ‘போர்க்கால அடிப்படையில்’ (war-footing) என்கிறோம். அது என்ன? 

1.15: யுத்தம் என்றாலே ஆயத்தம் தான் முதலில். அன்றாடப் போருக்கு இலக்கு விதிக்கப்படும். எதைச் செய்தாலும், இப்படிச் செய்தால் என்ன? ஸன்ட்ஸுவின் ‘சமர் கலை’ (The Art of War) வித்தைகளை, வல்லமையில் சொல்லலாமா? 

 

படத்திற்கு நன்றி: http://www.flickr.com/photos/66281151@N07/6754357891/in/photostream

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.