சாந்தி மாரியப்பன்

உதிரா இலைகளுடனும் அசையா மரங்களுடனும்

தானும் சோகத்தில் கலந்து கொண்ட

முதிராப் பூக்களை

நலம் விசாரிக்க வந்த பட்டாம்பூச்சி

வண்ணங்களையெல்லாம் உதிர்த்து நின்றது

குழந்தைகள் விளையாடாதிருந்த

பூங்காவில்..

 

சிறு நடை போட்டு வந்த

பிஞ்சுக்கூட்டத்தின்

விரல் பிடித்து வந்த தென்றல்,

கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்

ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்

புரண்டெழுந்த பூக்களைத்

தூரிகையாக்கித்

தீற்றிப் போகிறது வானவில்லை

பட்டாம்பூச்சியின் இறகுகளில்.

 

பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது

வானவில்லின் நறுமணத்தில்.

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “வாசனையாய் ஒரு வானவில்

 1. பூத் தூரிகையால்
  புனைந்தெடுத்த
  பூவையிவள் சொல்லோவியம்..
  நன்று.

         -செண்பக ஜெகதீசன்…

 2. வானவில்லுக்கு வாசம் சேர்த்த கவிதை நன்று!

 3. கருத்தாளுமையும், மொழியாளுமையும் நிறைந்த கவிதை. வாழ்த்துக்கள் !

 4. எதுவுமே அதுவாய் இருக்க வேறொன்று அவசியம்தான்… சந்தொஷம், துக்கம் எல்லாமே….வாழ்த்துக்கள்!

 5.        கற்பனை வண்ணத்தில் எழுத்தில் வரைந்த வானவில்லின் வாசம் என்னை மயக்கியது ,அருமை ***,தேவா**** 

 6. நல்ல கற்பனை என்றாலும் அதீதக் கற்பனை.
  வானவில்லில் கருப்பு இல்லை
  தென்றல் தொடா –  தொலைவில் அது!
  உண்மையில் வானவில் வானத்தில் தோன்றுவதில்லை 
  பூமிக்கு மேலே விட்ட – அந்தரத்தில் நுண்ணிய நீர்த்துகள்களின் குறுகாலக் கோலம் அது  
  காற்று வீசிடின் அங்கு வானவில் ஏது?
    
  கருப்பு என்பது வண்ணமே இல்லை என்பது உண்மை. 
  வண்ணம் மரித்துப் போகும் தருணங்களில் அவ்வெறுமையை இட்டு நிரப்பும் – ஜீவனற்ற ஒரு பூச்சு தான் கருமை  

  உதிரா இலைகளும் – அசையா மரங்களும் சோகத்தில்? முதிராப் பூக்களும் இதே யோகத்தில்?

  தனக்குள்ள வலிமையை – தனக்குள்ள பூரிப்பை – வளப்பத்தை – யௌவனத்ததை – அறிய மாட்டாது –  இவை சோகத்தில் இருப்பன?

  கூத்தாடிக் கூத்தாடி உதிர்ந்த இலைகளில் புரண்டு – எழுந்த பூக்கள்!!
  அதிலே ஒட்டிக்கொண்டிருக்கிற உற்சாகம்- வர்ணம்!

  கற்பனை என்றால் இந்தக் காட்டம் தான் விறுவிறுப்பு 
   ephemeral  என்று சொல்லக் கூடிய நிலையற்ற வாழ்க்கையின் குறுகால ஆடம்பரத்தையும் – படாடோபத்தையும் –  காட்டி  
  – அதன் பலவீனைத்தைக் கண்டும் அறிந்தும் – அதிர்ச்சியிலும் – அது விளைத்த – ஞானத்திலும்  மோனித்தபடி –  நிஷ்டையில் உறைந்த  நிலைப் பேற்றைக் காட்டி! 

  அழிவில் தோன்றும் சிருஷ்டியின் – எழுச்சியில் மீண்டும் கலக்கும்  –  ஆடம்பரத்தின் படாடோபத்தின் – சுழற்சியைப் படம் பிடிக்கும் ஜாலம் இங்கு காட்டப்ப் பட்டுள்ளது!

  வாழ்க்கைச் சுழற்சிக்கு முத்தாய்ப்பான எடுத்துக் காட்டுக்களாய் அமைவன வண்ணத்துப் பூச்சிகளே!     

  வண்ணத்துப் பூச்சிகள் என்றாலே வாழ்வின் நித்தியத்தையும் அநித்தியத்தையும் காட்டும் குறிகள் என்பது இலக்கிய – அறிவியல் – பாடம்!

  வண்ணத்துப் பூச்சிகள் பட்டாம்பூச்சிகளாக – வாழ்க்கைப் பாடம்! 

  வானவில் என்பது நிறப்பிரிகை – ஒளிவிலகல் (refraction)
  வண்ணத்துப் பூச்சியின் இறகு வண்ணமோ – ஒளிச்  சங்கமத்தால் (interference)

  பிரிவில் – இணைப்பு – சங்கமம்!! 
  மரிப்பில் பிறப்பு 

  வண்ணத்துப்பூச்சியின் இறகுகளின் மேல்பரப்பைச் சுரண்டிப் பார்த்தவர்கள் கண்டது கருப்பு மட்டுமே! 

  மக்கிப்போகும் பூக்களும் இலைகளும் கிளப்பும் புழுத்த வாசனையில் வசமாய் – உயிர்வாசம் – எழு(ம்)(ப்)பும் ஆற்றல் தோற்றம் –  சக்தி நிலைத்ததெனும் காட்சி   

  சொல்லப்போனால் வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகளில் மொத்தம் ஐந்து வண்ணங்கள் மட்டுமே! 

  மின்னிடும் திருவாசகத்தின் மாணிக்கவரிகள்:

  “நிறங்களோர்  ஐந்துடையாய் – விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் 
  எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை ”

  நன்று 

   

   

   

  உதிர்ந்த பூக்களின் – இலைச் சருகுகளின் – வாசத்தையும் வர்ணத்தையும் – மேலேபோய் – கீழிறங்கி வந்து – வண்ணத்துப் பூச்சிகள் வாங்கிகொண்டனவா?

 7. @செண்பக ஜெகதீசன்,
  @பாகம்பிரியாள்,
  @இளங்கோ,
  @புவனா ஞானசெல்வம்,
  @தேவா,

  கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி.

  @அவ்வை மகள்,

  //உதிர்ந்த பூக்களின் – இலைச் சருகுகளின் – வாசத்தையும் வர்ணத்தையும் – மேலேபோய் – கீழிறங்கி வந்து – வண்ணத்துப் பூச்சிகள் வாங்கிகொண்டனவா?//

  கருத்தைக் கச்சிதமாகக் கண்டு கொண்டீர்கள்.. விரிவான அலசலுக்கும் மிக்க நன்றி 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *