பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: குரு 1-ல். கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 2-ல் கேது. வியாபாரிகள் பணப்பெட்டி சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். 5-ல் செவ்வாய்.நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டியிருப்பதால், விழிப்புடன் இருத்தல் நல்லது. 7-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள் அதிகமாக கடன் வாங்குவதைக் குறைக்கவும். 11-ல் சூரியன்.புதன். மாணவர்கள் எதிர் கொண்ட சிக்கல்கள் யாவும் தன்னால் விடுபடுவதால், மந்த நிலை மாறி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் அனுசரணையாய் இருப்பதால், சொத்து விஷயங்களை லாபகரமாய் முடித்துக் கொள்வீர்கள். 12-ல் சுக்ரன். சுய தொழில் புரிபவர்கள், தொழிலமைப்பில் புதுப்புது மாற்றங்களைப் புகுத்தி அதிக லாபம் பெறுவர்.

இ(ந)ல்லறம்:  பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாய் இருப்பது அவசியமாகும். குடும்ப நலம் சிறக்க பெண்கள் காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்து விடவும். ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இல்லாவிட்டால், வீண் தொல்லை வாசலில் வந்து நிற்கும்.

ரிஷபம்: 6-ல் சனி. அலுவலகத்தில் நிலவிய பிணக்குகள் தீர்வதால் பணியில் இருப்பவர்கள், சுறுசுறுப்புடன் வேலைகளைத் தொடர்வார்கள். 10-ல் சூரியன், புதன். பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறப்பாக வேலை செய்து, நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு, அதிக லாபத்தைச் சேர்ப்பார்கள்.11-ல் சுக்ரன். கலைஞர்கள் விரும்பிய ஆபரண வகைகளை வாங்கி மகிழ்வர். 1-ல் கேது. வீண் பழி, அருகில் வராமலிருக்க, பொது வாழ்வில் உள்ளவர்கள் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம்செலுத்துவது நல்லது. 4-ல் செவ்வாய். பொறுப்பில் உள்ளவர்கள், . தவறான ஆலோசனைகள் சொல்பவர்களிட மிருந்து விலகி இருப்பது புத்திசாலித்தனம். 7-ல் ராகு. மாணவர்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டால் நண்பர்களின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். 12-ல் குரு. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், நஷ்டம் என்பது அதிகரிக்காமலிருக்கும்.

இ(ந)ல்லறம்: . இந்த வாரம் கண் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் பெண்களின் இயல்பு வாழ்வை பாதிக்கக்கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நல்லது. அத்துடன் வாகனங்களில் செல்லும் போது கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

மிதுனம்: 3-ல் .இருக்கும் செவ்வாய் வியாபாரிகளின் லாபக் கணக்கை அதிகமாக்கும் வாய்ப்புகளை உருவாக்குவார். 6-ல் ராகு. விவாதக் குழு, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பொது வழ்வில் இருப்பவர்களின் கை மேலோங்கியிருக்கும். 11-ல் குரு. நல்ல நண்பர் கள், மாணவர்களின் முயற்சிகளை வெற்றிப் பாதை நோக்கி திருப்பிவிடுவார்கள். 5-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள் விலையுயர்ந்த சரக்குகளுக்குரிய பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். 9-ல் சூரியன், புதன். பொறுப்பில் உள்ளவர்கள் சூழ்நிலைக்கேற்ற வாறு செயல்பாடுகளை மாற்றிக் கொண்டால், நினைத்த இலக்கை அடைவது எளிதாகும். பணியில் உள்ளவர்கள் தங்கள் தராதரத்திற்கேற்றவாறு நட்பு நிலையில் கவனமாக இருந்தால் எந்த பிரச்னையும் உங்களை அண்டாது . 10-ல் சுக்ரன். வீடு மனைகளை வாங்கி விற்பவர்கள், பிறருக்காக வாங்கிக்கொடுத்த தொகையை சிரமத்தின் பேரில் வசூலிக்க நேரிடும். 12-ல் கேது. .கலைஞர்கள் எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவது என்பது சற்றே இழுபறியாய் இருக்கும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் பிள்ளைகளுக்காக, பணம் கட்டும் ரசீதுகளை பத்திரமாக வைத்தால் வீண் மன உளைச்சலிலிருந்து தப்பிக்க இயலும். மேலும்,இல்லறத்தில், ரகசியமாய் வைக்க வேண்டிய செய்திகளை ரகசியமாகவே வைத்தால், நிம்மதியாய் உலா வரலாம்.

கடகம்: 11ல் கேது. ,பொது வாழ்வில் இருப்பவர்களின் சொல்வாக்கிற்கேற்ப செல்வாக்கும் உயரும். 9-ல் இருக்கும் சுக்ரன் சாதகமாய் இருப்பது போல், சக கலைஞர்களின் போக்கும், கலைஞர்களின் முயற்சிக்கு சாதகமாக இருக்கும் 8-ல் புதன்.,சூரியன். மாணவர்கள், பொது இடங்களில் பிரச்சனைக்குரிய விவாதங்களில் ஈடுபடாமலிருந்தால், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வதில் சிரமம் இராது. 2-ல் செவ்வாய். பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் திறமையான நபர்களை அருகில் வைத்துக் கொண்டால், வேண்டிய வேலைகளைப் பக்குவமாக முடித்து விடலாம். .4-ல் சனி. வியாபாரிகள் சரக்குகளை அனுப்புவதில் குளறுபடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வியாபார விறுவிறுப்பு குறை யாமலிருக்கும். 5-ல் ராகு. பணியில் இருப்பவர்கள் பிரச்சனைக்குரிய நபர்களின் செயல்பாடுகளை முறியடிக்க அமைதியாய் செயல்படுவது நல்லது.. 10-ல் குரு. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டாமலிருப்பதே புத்திசாலித் தனமாகும்.

இ(ந)ல்லறம் :வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி பளு இருந்தாலும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். பெண்கள் பொது இடங்களில் வேண்டாத விஷயங்களை அலசாமல் இருப்பது நல்லது. பிள்ளைகளின் உயர் கல்விக்காக கல்விக் கடன் பெறும் முயற்சிகளில் சிறிது தேக்க நிலை இருக்கும்.

சிம்மம்: 3-ல் சனி. மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பார்கள்.. 9-ல் குரு. புதிய பொருட்களின் சேர்க்கையால் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி கூடும் 7-ல் சூரியன், புதன். சுயதொழில் புரிபவர்கள் தொழிலாளர் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டால், நஷ்டப்பட வேண்டியிருக்காது. . சிறு தொழில் புரிபவர்கள் தாழ்வு மனப்பான்மை குடியேற இடம் கொடுக்க வேண்டாம். 8-ல் சுக்ரன். வேலையில் முழு கவனம் செலுத்திவரும் கலைஞர்களுக்கு எதிலும் வெற்றியே! 1-ல் செவ்வாய். வியாபாரிகள் நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செல்லும்போது கவனமாக இருக்கவும். .4-ல் ராகு.கலை ஞர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரிடம் கவனமாக இருந்தால், வீண் வேதனைகளைத் தவிர்க்கலாம். 10-ல் கேது. வியாபாரிகள் வேலையாட்களிடம் பங்குதாரர்களைப் பற்றிய விமர்சனங்களைக் கொட்ட வேண்டாம்

இ(ந)ல்லறம்: பெண்களின் ஏற்றத்திற்கு கணவரும் உறுதுணையாய் இருப்பதால், இல்லம் புதுப் பொலிவுடன் விளங்கும். பெண்கள் சில பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். இந்த வாரம் திருப்திகரமான பணப் புழக்கம் இருப்பதால், சேமிப்பில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும் .

கன்னி: 6-ல் இருக்கும் உங்கள் ராசிநாதனான புதனோடு, சூரியனும், கை கோர்த்துக் கொள்வதால், மாணவர்கள் தேர்வு நேரங்களில், தகுந்த கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வர். 3-ல் ராகு. வியாபாரிகள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாக இருக்கும். 2-ல் சனி. .பணியில் உள்ளவர்கள், எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் உற்சாகத்தைக் குறைக்க இடம் தராமலிருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். 7-ல் சுக்ரன். கலைஞர்கள் கடன் அட்டைகளை பயன்படுத்துவதில், கணக்காக இருந்தால், கடன் தொல்லையை கட்டுக்குள் வைக்க இயலும். 8-ல் குரு.சுய தொழில் புரி பவர்கள் வரவு செலவுகள் வரைமுறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமிராது 9-ல் கேது. பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை தலை காட்டாமல் இருக்கும். 12-ல் செவ்வாய். வீடுமனை வாங்கி விற்பவர்கள் மனிதர்களின் தராமறிந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.

இ(ந)ல்லறம்: புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள பெண்கள், கேளிக்கைகளில் மனத்தை அலைபாய விடாமல், கட்டுப்பாடுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். அத்துடன் அடிக்கடி வெளியூர் செல் பவர்கள் பிரயாணக் களைப்பு உங்கள் பணிகளில் குறுக்கிடாமல் இருக்க, தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடர்வது நல்லது.

துலாம்: 7-ல் குரு. இந்த வாரம், மாணவர்களின் உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். 11-ல் செவ்வாய். பணியில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதோடு சொந்த பந்தங்களால் மதிக்கப்படும் சிறப்பான சூழலும் உண்டாகும். 1-ல் சனி. வியாபாரிகள் கூட்டாளிகளுடன் பிணக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டால், மனக்கஷ்டம் தோன்றாது. 2-ல் ராகு. கலைஞர்கள் ஒவ்வாத பழக்க வழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கையில் கலக்கம் இராது. 5-ல் சூரியன். புதன். . சுய தொழில் புரிபவர்கள் தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதை குறைத்துக் கொண்டால், பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். 6-ல் சுக்ரன். கலைஞர்கள் வாகன கடனுக்குரிய தொகை சரியான நேரத்தில் கட்டப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண் காணித்துக் கொள்வது நலம். . 8-ல் கேது. புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் முன் பொது வாழ்வில் உள்ளவர்கள், அதில் உள்ள நிறைகுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.

இ(ந)ல்லறம்: பெண்கள், பிள்ளைகளின் பிரச்னைகளை கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஆறுதலையும் வழங்கி வந்தால், அவர்களின் பாதை பிறழாமல் இருக்கும். அத்துடன் இந்த வாரம், பெண்கள் அலுவகத்தில், தேங்கியுள்ள பணிகளை முடிக்க, பம்பரமாய் சுழல வேண்டி இருக்கும்.

விருச்சிகம்: 4-ல் சூரியன் புதிய மனிதர்களின் தொடர்பு தொல்லைகளுக்கு வழி வகுக்காமல் இருக்க, பணியில் இருப்பவர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது 4-ல் புதன். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிர்பார்த்த வெற்றி, வந்து சேரும். 5-ல் சுக்ரன். கலைஞர்கள். சுறுசுறுப்புடன் வேலை களை முடிப்பதில் அதிக ஆர்வம் காட்டு வார்கள். 1-ல் ராகு. பொறுப்பில் இருப்பவர்களுக்கு, சில நேரங்களில், அடுத்தவரின் வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும் நிலை நிலவும். 6-ல் குரு. ,மாணவர்கள் டாம்பீக செலவுகளுக்கு தலையாட்டாமல் இருந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காது. 7-ல் கேது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபடும் பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது நல்லது. 10-ல் செவ்வாய். சுய தொழில் புரிபவர்கள் ,பத்திரங்களை தந்து கடன் வாங்குவதை தவிர்க்கவும் . 12-ல் சனி. வாகனங்களை வாங்கி விற்பவர்கள், கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள் நேரா மல் பார்த்துக் கொள்ளுங்கள்

இ(ந)ல்லறம் பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பிள்ளைகளுக்கு, பணம் செலவழிப்பது தவறல்ல. ஆனால், அவ்வப்போது, வரவு செலவு கணக்குகளை எழுதிவாருங்கள். வீண் செலவுகளை குறைக்க முடியும்.

தனுசு: 5-ல் குரு. வியாபாரிகளுக்கு, விரிவாக்கத்திற்கேற்றவாறு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். 6-ல் கேது. பணியில் இருப்பவர்கள் கவனத் தடுமாற்றத்துக்கு இடமின்றி வேலைகளை விரைந்து முடிப்பார்கள். 11- ல் சனி. .சேமிப்பால் சுயதொழில் புரிபவர்களின் பொருளாதாரம் சீராக இருக்கும். 4-ல் நிற்கும் சுக்ரன் கலைஞர் களை விருந்து, வேடிக்கை ஆகியவற்றில் கலந்து கொள்ளச் செய்து அமர்க்களப் படுத்தி விடுவார்! 3-ல் சூரியன். திறமைக்குரிய பாராட்டு, மாணவர்களை புதிய முயற்சிகளில் ஈடுபடுத்தும். 3-ல்புதன். .நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செய்பவர்கள், வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைப்பிடித்து வருவது புத்திசாலித்தனம். 9-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள், தாங்கள் சொல்லும் சொல்லும், செய்யும் செயலும் ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொண்டால், எப்போதும் உங்கள் நற்பெயருக்கு பங்கம் வராது. 12-ல் ராகு. வெளியூர்ப் பிரயாணங்களில் உங்கள் உடைமைகளை பத்திரமாக வைப்பது அவசியம்.

இ(ந)ல்லறம் : வெளியூர்களுக்குச் சென்று வரும் வாய்ப்புக்ள் கிட்டுவதால், பெண்கள் மனதில் இருந்த ஏக்கம் மாறி, மீண்டும் மத்தாப்பாய் வாழ்க்கை ஒளிரத் துவங்கும். ,இந்த வாரம், அலுவலக வட்டத்தில். கவனமாக இருக்கவும். இல்லையெனில் பிறர்க்கு உதவப் போய், அங்கும் இங்கும் அலைய நேரிடும்.

ம்கரம்: 11-ல் ராகு. புகழேணியில் இடம் பெற வேண்டும் என்ற கலைஞர்களின் ஆசையை, 11-ல் இருக்கும் ராகு நிறைவேற்றி வைப்பார். 3-ல் சுக்ரன். மாணவர்கள் தங்களின் கலைத்திறமையை அரங்கேற்றும் நிகழச்சிகளில், பங்கு கொள்வர். . 2-ல் சூரியன்., புதன். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சில நேரங்களில் அதிக அலைச்சலும், சரிவர உண்ணமுடியாத நிலையும் இருக்கும். 4-ல் குரு. பங்குச் சந்தை யில் ஒருவித நிச்சியமற்ற நிலைமை நிலவுவதால், வியாபாரிகள் பண முதலீட்டில் அதிக அவசரம் காட்ட வேண்டாம். . 5-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள் இந்த வாரம் பொருள் சிக்கனத்தோடு சொல் சிக்கனத்தையும் மேற்கொள்வது நன்மையாக இருக்கும்.. 8-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள் காசோலைகளின் பயன்பாட்டில் கருத்துடன் இருந்தால், பொருளாதாரச் சிக்கல் ஏதும் எழாது. 10-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவ ர்கள், உறவாடிக் கெடுப்பவர்க ளிடமிருந்து தள்ளி இருப்பது அவசியம்

இ(ந)ல்லறம் : பெண்கள் குடும்பத்தில் அவ்வப்போது எழும் சிக்கலை உடனுக்குடன் தீர்த்து விட்டால், உறவு வட்டத்தில், விரிசல்கள் விழாமலிருக்கும்.. கர்ப்பிணிப் பெண்கள் அஜீரணம், வயிற்று வலி ஆகியவற்றின் தொல்லையின்றி உடல் நலம் சிறக்க மிதமான உணவுகளை உண்டு வருவது நல்லது.

கும்பம்: 2-ல் சுக்ரன். கலைஞர்கள், புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி அடைவார் கள் 1-ல் புதன்., சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்கள் முக்கியமான தருணங்களில் பொறுமையாய் இருந்தால், காரியங்கள் நன்மையாய் முடியும். 3-ல் குரு. மாணவர்கள் ஞாபகமறதிக்கு இடம் தராமல், கருத்தூன்றி படித்துவந்தால், அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். 4-ல் கேது., வீடு மராமத்து, பராமரிப்பு ஆகியவற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். 7-ல் செவ்வாய். வியாபாரிகள் அரசு தொடர்பான ஆவணங்களில், அலட்சியம் காட்டி னால், அந்த காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும். 9-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள், கவனமாக இருந்தால், உதவி செய்தவர்கள், அதிக சலுகைகளை எடுத்துக் கொள்ளும், சூழலைத் தடுத்து விடலாம். 10-ல் ராகு., வேலைக் காக வெளியில், தங்கியிருப்பவர்கள், நண்பர்களிடம் அளவோடு நடந்து கொண்டால், நட்பும் உறவும் எல்லோருக்கும் இதமாக இருக்கும். .

இ(ந)ல்லறம் : இந்த வாரம் பணி புரியும் பெண்கள் தங்கள் திறமையால் விசேஷ சலுகைகளைப் பெற்று மகிழ்வார்கள் . பெண்கள் அக்கம் பக்கத்தாருக்கு தங்களின் விலை உயர்ந்த பொருள்களை இரலவலாகத் தருவதை தவிர்த்தால், வீண் பிரச்னைகளையும் தவிர்த்து விடலாம்.

மீனம்: 1-ல் சுக்ரன். கலைஞர்கள் கலைப் பொருட்கள் , நவீன பொழுது போக்கு சாதனங்கள், ஆகியவற்றை வாங்கி மகிழ்வார்கள். 2-ல். இருக்கும் குரு, மங்கள காரியங் களை நடத்தி வைப்பதற்குரிய பொருளாதார வரவைத் தந்திடுவார் 3-ல் கேது. இந்த ராசிக்காரர்கள் தங்களின் பூர்வீகச் சொத்து, வீடு முதலியவற்றை முறையாகப் பராமரித்து, உறவுகளின் மத்தியில் பெருமையோடு வலம் வருவார்கள். 6-ல் செவ்வாய். சுயதொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த வங்கிக்கடன் தக்க சமயத்தில் வந்து சேரும். .8-ல் சனி .பணியில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பிய ,சலுகைகளைப் பெற சற்று பொறுமை காப்பது அவசியம் 9-ல் ராகு. பணப் பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால், நஷ்டம், கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். 12-ல் சூரியன், புதன். வியாபாரிகளுக்கு பழைய கடன் தொல்லைகள் மூலம் சில பிரச்சனைகள் தலை காட்டும். எனவே கணக்கு வழக்குகளை முறையாக வைப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

இ(ந)ல்லறம்: குடும்பத்தில் அபிப்ராய பேதங்கள் தோன்றினாலும், பெண்கள் உறவுகளிடம் பழகும் போது கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் தலை தூக்காமலிருக்கும். பெண்கள் உணவு, ஓய்வு இவை இரண்டிலும் முறையாக இருந்தால், பிள்ளைகளுடன் மகிழ்வதற்கு போதிய நேரம் ஒதுக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *