செண்பக ஜெகதீசன்
தடியால் அடித்துத்
துவைத்த பின்னும்
கொடியின் பிடியை
விடவில்லை..
கொள்கைப் பிடிப்பு
குமரனுக்கு…
இன்று,
கொடியை மாற்றிப்
பிடிக்கின்றார்-
அடிக்க..
கொள்கைப் பிடிப்பு
கொஞ்சமும் இல்லாததாலே…!
படத்திற்கு நன்றி :
https://profiles.google.com/112497527148617020529/buzz/J3k4xtiCuiv
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…