சருகாய் விழும் முன்
ஜெ.ராஜ்குமார்
கண் விழிக்கிறோம் தினம்
கடவுளின் கருணையினால்!
உன் பிறப்பு
உன் இறப்பு தெரியாமல்
நீ வந்தாய் இவ்வுலகில்!
உன்னுடையதென்று எதுவும் இல்லை
என்பதே உண்மை!
உனக்கென வரலாறு நீ படைத்துச் சென்றாலும்…
எடுத்து செல்ல முடியாதே…!
உன்னோடு கடைசியில்.
எவரேனும் அதைக் கெடுத்து விடவும்
அனுமதி கிடையாது…!
உன் உயிரில்
ஒவ்வொரு உயிரையும் பார்த்தாலே
ஒரு துயரமும் வாராதே!
உண்மையான உறவுகளால்
ஒரு தொந்தரவும் வாய்க்காதே!
நன்மை செய் மனமே…!
உயிர் இருக்கும் வரையில்
உண்மை சொல் மனமே!
வன்மை ஒழித்திட்ட நாடு செய் மனமே!
கண் இமை போல் காத்தருள்வாய்
உன்னையே நம்பி இருக்கும் சொந்தங்களை…!
சோர்வு வேண்டாம்
சுறுசுறுப்பை மணந்து கொள்!
சிரிப்போடு
சிந்திப்பதையும் கற்றுக்கொள்!
சற்றும் தளரா
மனதாய் மாற்றிக்கொள்!
சருகாய் விழும் முன்
சரித்திரம் படைத்துச் செல்!
படத்திற்கு நன்றி:http://canopenerboy.blogspot.in/2010/11/liminal-times.html