மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது
சித்திரை சிங்கர்
மின்சாரம் வழங்குவது பற்றி…. அரசின் அறிவிப்புகள் ஆச்சரியமாகவே உள்ளது. தேர்தலுக்கு முன், தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்றார்கள் வெற்றிபெற்று ஆட்சியினை பிடித்தவுடன் தினமும் எட்டு மணிநேரம் பவர் கட் ஆனால் சென்னைக்கு மட்டும் தினமும் இரண்டு மணி நேரம் என்ற பாரபட்சமான அறிவிப்பு. சென்னையில் உள்ளவர்கள் மட்டுமா ஆட்சியை தேர்ந்தெடுத்தார்கள் தமிழகம் முழுவதுமுள்ள மக்கள்தானே…! சரி… அது போகட்டும் மின் கட்டண உயர்வு பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்த “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்” வழங்குவது பற்றி முன்னிலைப்படுத்தித்தான் பிரச்சனைகள் உருவாகி சமாதனபடுத்தியுள்ளர்கள் என்பது பத்திரிக்கைச் செய்திகளின் வழியாக நாம் அறிந்ததே. கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுத்துவதிலும் நமது மத்திய மாநில அரசுகள் மௌனமாக இருந்து கொண்டே இருக்கிறதே தவிர தமிழக மின் தேவையினை முன்னிறுத்தி எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுத்ததாகக் காணவில்லை. ஒரு தொகுதியின் இடைத் தேர்தலுக்காக இருபத்தியாறு அமைச்சர்களை அனுப்பி நலத் திட்டங்களை கவனிக்கும் நமது அரசு இந்த மின் தட்டுப்பாடு பற்றி விரைவில் சரி செய்யப்படும் என்ற அறிவிப்புடன் சரி…! சரியான செயல்பாடுகள் கொஞ்சமும் இல்லை.
இலவசமாக அரசு எதையும் கொடுப்பதே வாக்காளர்களின் ஓட்டுக்காக மட்டும்தான் என்பது ஊரரிந்த உண்மை. இலவச மின்சாரமும் அப்படித்தான். விவசாயிகள் இலவச மின்சாரத்தால் விளைவிக்கப்படும் பொருட்களை அரசுக்கு மானிய விலையிலா தருகிறார்கள்….? இல்லை பொது மக்களுக்குத்தான் குறைந்தவிலையில் விற்கிறார்களா..? “இலவச மின்சாரம்” விவசாயிகளுக்கு வழங்குவதை அரசினால் ரத்து செய்ய இயலாது என்றால்… ஒன்று விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கலாம் இல்லை விவசாயிகள் உபயோகப்படுத்தும் மின்சாரத்துக்கு உண்டான கட்டணத்தை அரசே அந்தந்த மாதங்களில் செலுத்தும் வகையில் அரசு உத்தரவு இருக்க வேண்டும். அதுதான் நியாயம். இல்லாத நிலையில். இலவச மின்சாரத்தினால் உண்டாகும் “வருவாய் இழப்பு” அத்தனையும் வரிகள் அனைத்தையும் ஒழுங்காகக்கட்டும் பொதுமக்கள் தலையில் கட்டுவது நியாயமாகப்படவில்லை. ஒரு தாய் தனது பிள்ளைகள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது எப்படியோ…. அது போல அரசும் அது மத்திய அரசானாலும் சரி மாநில அரசானாலும் சரி தனது ஆட்சியின் கீழ் உள்ள மக்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மாற்றந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. உடனடியாக கூடங்குள அணு மின் நிலையத்தின் பாதுகாப்பினை உறுதிபடுத்தி அதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுத்து செயல் படுத்த வேண்டும். இல்லையெனில் இதற்கு மாற்றாக வேறு வழி வகையினை கண்டுபிடித்து மின் உற்பத்திக்கு தகுந்த மாற்று வகைகளை உருவாக்கி மின் உற்பத்தியினை பெருக்கி, மின்கட்டண உயர்வு மற்றும் “பவர் கட்” போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களை குறிப்பாக தமிழக மக்களை உடனடியாக காக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமா..?
உங்கள் சமூக சிந்தனை மென்மேலும் சிறக்க வாழ்துகிறேன்
மென்மேழும் எழதுங்கள் சமூக சிந்தனை சார்ந்து
வாழ்த்துக்கள்
கலை