எத்திராஜ் கல்லூரியில் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்!

கொஞ்சம் காபி கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 9,2012 அன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் சிறப்பாக துவங்கியது…..

சந்தோஷம்,உற்சாகமூட்டும் ஆரவாரம்,சிரிப்பு மற்றும் கலை நிகழ்ச்சி என பல்வேறு வகையான திறமைகளை ஒருங்கிணைத்த எத்திராஜ் கல்லூரியின் சிருஷ்டி2012 கலை நிகழ்ச்சியினை பற்றி கூற வார்த்தைகளே இல்லை.அதை போன்றே அங்கு உற்சாகமாக நடைபெற்ற கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளையும் யாராலும் மறக்க இயலாது.

இத்திரைப்படத்தின் விளம்பரங்கள் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காபி ஷாப்பில் ஆரம்பித்தன.காபியை போலவே நல்ல மனம்மிக்க அன்புடன், இத்திரைப்படத்தின் கருவினை போலவே அனைவரும் அன்பும் நட்பும் சூழ கொண்டாடினர்.அங்கு திரையிடப்பட்ட இத்திரைப்படத்தின் டிரைலரை அங்குள்ள மாணவர்கள் கண்டுகளித்து நல்ல வரவேற்ப்பளித்தனர்.

கல்லூரி மாணவ மாணவிகளை கவரும் விதமாக பன்னாட்டு காபி  வகைகள் மற்றும் சாக்லேட்கள் குறைந்த விலையில் படத்தின் விளம்பரத்துடன் விற்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் விளம்பரங்கள் கல்லூரி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் திரைப்படத்தின் வெளியீட்டை தாங்கள் ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எத்திராஜ் கல்லூரியில் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்!

Leave a Reply

Your email address will not be published.