நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – 6

பெருவை பார்த்தசாரதி

கல்வி கற்பிப்பதில் ஆர்வம் மிகுந்து இருக்கும் ஒரு ஆசிரியருக்குக் கல்வி பயில்வதில் மாணவனின் ஈடுபாடு எந்த அளவுக்கு அமைந்துள்ளது என்பது பற்றிய சிந்தனை, அவர் மனதில் எந்த நேரத்திலும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். தொடர்ந்து நல் ஆசிரியராகப் பணிபுரிகின்ற ஒருவர், நல்ல மாணவர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கும் போது சில இன்னல்களையும் இன்றைய காலகட்டத்தில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என்பதையும், சற்று நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வளர்ந்து பெரியவனாகி, அவனும் ஒரு மனிதனாகத் தற்போதைய சமூகத்தில் கலக்கும் போதுதான், மாணவர்களின் வெகுளித்தனம் மறைந்து பலவித சமுதாய இன்னல்களுக்கும் ஆளாகிறான் என்பது உண்மை.

இதற்கு மாறாகப் பள்ளிப் பருவத்திலேயே ஒரு மாணவனால், ஆசிரியருக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம்(10-02-12) ஒன்றைக் குறிப்பிடுகையில், அந்த மாணவனை இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது எது?……என்ற கேள்விக்குக் கல்வி அறிஞர்களும், சான்றோர்களும் பெற்றோர்களும் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன் வைக்காமல், நம்மைச் சூழ்ந்துள்ள இன்றையச் சமூகம் மற்றும் தரமற்ற கலாசாரமும், உடந்தையாக இருந்திருக்கிறது என்று பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்தையும் அதிக அளவில் சிந்திக்க வைத்து விட்ட இந்தச் சம்பவம், தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தொலைக்காட்சிகள், ஊடகங்கள், பள்ளிக்கூடங்களில் நடந்த அவசர ஆலோசனைகளுக்கும் இடமளித்தன. என்ன நடந்தது?……என்பது பற்றிப் பத்திரிகைகள் மூலமாக விரிவாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அனைத்து சமுதாயமும், இதன் மூலம் ஒரு படிப்பினையையும், வழிகாட்டுதலையும் கற்றுக் கொள்ள முடிந்தது.

ஒன்றுமறியாத வெகுளித்தனம் பொருந்திய மாணவர்கள், தாங்களாகவே ஒரு நல்லுலகத்தை உண்டாக்கி விடமுடியாது. வெளியுலகம் எவ்வாறு அமைந்துள்ளதோ அதைப் பொருத்தே மாணவச் சமுதாயமும் அமையும். தற்போது வெளியுலகம் மிகவும் சீர்கேடு அடைந்துள்ள போது, நல் ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் நாம் எவ்வாறு உருவாக்க முடியும் என்பதே அறிஞர்கள், சம்பவம் நடந்த அன்று, நம் முன் வைத்த சிந்தனைக்குறிய கேள்விகளாகும்? அன்றைய தினம், கல்வி அறிஞர்கள் பலர், மாணாக்கர்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்குமே, வழங்கிய அறிவுரைகளை, ‘இந்து’ (The Hindu) ‘தினமலர் (Dinamalar)’, ‘தினத்தந்தி’ (Daily Thanthi’, போன்ற முன்னணிப் பத்திரிகைகள் சிறப்புச் செய்திகளாக வெளியிட்டிருந்தன. அந்த அறிவுரைகள், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் உதவும் வகையில் அமைந்துள்ளது. அதில் சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்.

கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

கேள்வித்தாள்களைகளை வடிவமைப்பதிலும், விடைகளைத் திருத்தும் முறைகளிலும் மேன்மேலும் பல மாற்றங்களைப் புகுத்த வழிவகை செய்யவேண்டும்.

பள்ளிகளில், மாணவர்களின் மனநலம் காக்கப் பட்டு, மன உளைச்சலிருந்து (Stress & Mental torture) விடுபடத் தகுந்த வசதிகளைப் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும்.

பள்ளி வளாகங்களுக்குள்ளேயே, திறமையான ஆசிரியர் மற்றும் மனநல மருத்துவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஒழுக்கத்திலும் பண்பிலும் குறைபபடுள்ள மாணவர்களுக்கு அறிவுரை (Counselling) வழங்க உதவி புரியவேண்டும்.

ஒரு தலைசிறந்த மாணவனை உருவாக்குவதில், ஆசிரியருக்கு மட்டும் பங்கு இருந்தால் போதாது, பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் உடன் இருந்து உறுதுணையாகச் செயல் படவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் ஏதாவது பெரிய அளவில், கல்வி கற்பதில் மாற்றம் இருந்தால், அதை உடனே சீர் செய்ய மற்றவர்களின் ஆலோசனையோடு செயல்பட வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களிடத்தில் உள்ள குறைகளைத் தெரிவிக்கும்போது, அந்தக் குறைகளைக் களைவதில் பெற்றோர்கள் கவனமுடன் செயல் படவேண்டும், இல்லாவிட்டால், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் மேலோங்கக் காரணமாகிவிடும்.

மாணவர்கள் வன்முறைச் (violent activities) செயல்களில் ஈடுபடும்போது, “நான் அந்த சினிமாவைப் பார்த்தேன்”, “இந்த பாடலைக் கேட்டேன்” ‘அதனால் தான் இத்தகைய கொடுமைகளைச் செய்ய என் மனம் துணிந்தது’ என்று பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். பள்ளிக்கூடங்களில் நடக்கும் சில வன்முறைகளுக்கும், அட்டூழியங்களுக்கும், மாணவர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள சீர்கெட்ட சமூகம், வன்முறையைத் தூண்டும் சினிமா, அரசியல் அதிரடி நிகழ்சிகள், தரமற்ற சினிமாப் பாடல்கள், போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன என்பதே பெருவாரியான பெற்றோர்களின் கருத்து.

மாணவர்கள் தவறாகச் செயல்படுவதற்கும், முக்கால் பங்கு தவறுகளுக்குப் பொறுப்பேற்பதும் எதுவென்றால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் “பாக்கெட் மணி” (Pocket Money). தேவைக்கு அதிகமாகப் (Excess pocket money) பாக்கெட் மணி கொடுப்பதால், மாணவர்கள் எளிதாகத் தவறான காரியங்களில் ஈடுபடத் தூண்டி விடுகிறது. இதுவும் பெற்றோர்கள் கவனித்துச் செயல்படவேண்டிய ஒன்று. குழந்தைகளின் உணவுக்காகக் கொடுக்கப்படும் இந்தப் பணம், அதே சமயத்தில், ஊதாரித்தனத்துக்கும் வழி வகுத்து விடுகிறது. அசோசெம் (ASSOCHAM) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் பின்வருமாறு தெரிவித்து இருக்கிறது. (ஆதாரம் 10.02.12 வெளிவந்த ‘The Hindu’ நாளிதழ், பக்கம்-4)

இந்தியாவில், மெட்ரோ சிட்டியில் பயிலும், 12-20 வயதுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சமாக 12,000 வரையிலும், குறைந்த பட்சமாக 5000 வரையிலும் பாக்கெட் மணியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த அளவு, தேவையை விட மூன்று பங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 55% எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதற்கும், 25% சினிமாவிற்குச் செல்வதற்கும், குறைந்த பட்சமாக வெறும் 20% மட்டுமே உணவிற்காகச் செலவிடப்படுகின்றன. அப்படியே உணவிற்காகச் செலவிட்டாலும், ஜங்க் புட் (Junkfood) என்று சொல்லக்கூடிய உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய துரித உணவுப் பொருட்களை (Fast food) மட்டுமே விரும்புகிறார்கள்.

மாணவர்களிடையே உள்ள நல்லொழுக்கத்தைப் பேணிக் காப்பதற்கு, இன்றைய நல் ஆசிரியர்கள் படும் அல்லல்களையும், அவதிகளையும், இந்த நேரத்தில் நாம் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கையால் “எங்களால் திறம்படச் செயல் படமுடியவில்லை”, என்பதும், RTE Act சொல்லுகின்ற படி, “ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உள்ள விகிதாச்சாரம் 1:30 ” என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அளவுகோலைக் கடைப்பிடிக்க, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் ஆசிரியர்களுடையே இருக்கும் ஆதங்கங்களில் ஒன்று.

இது தவிர, மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை நேரில் சென்று பெற்றுக்கொள்ளும்போது, ஆசிரியர்களுக்கு ஏற்படும் சங்கடங்களைப் பற்றியும் நாம் கேள்விப் படுகிறோம். சில பள்ளி நிர்வாகங்கள், தங்கள் ஆசிரியர்களை ஒரு ‘விற்பனை அதிகாரி’ (Sales executive) போலச் செயல் பட வைக்கிறது. ஆசிரியர்களைக் கட்டாயப் படுத்தி ஹாம்வே (HAMWAY), ஹிண்டுஸ்தான் லீவர் (HINDUSTAN LEVER), தனியார் இன்சூரன்ஸ் (PRIVATE INSURANCE COVERAGE) போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு, மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, ஒரு ஏஜெண்ட் போலச் செயல்பட வைத்து, அதற்குண்டான கமிஷனையும் யாரும் அறியா வண்ணம் பெற்று விடுகின்றனர். இது தவிர, இன்றைய சூழ்நிலையில் “டியூஷன்” (PRIVATE TUTION) என்ற மாயை நம்மிடையே தலை விரித்தாடுகிறது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வகுப்பறைகளில் பாடங்களைச் சரியாக நடத்தாமல், டியூஷனில் மட்டுமே கவனம் செலுத்தி அதிக அளவில் பணம் ஈட்டுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.

நன்றாகப் பயிலும் ஒரு மாணவனின் கல்வித் திறனுக்கு, ‘டியூஷன்’ ஒரு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. இன்னொரு கொடுமை என்னவென்றால், டியூஷன் பயிலும் மாணவனுக்கு மட்டும், எழுதப் போகின்ற வினாத் தாள்கள் பற்றி முன்கூட்டியே சில விபரங்களை அளித்து அதிக மதிப்பெண் எடுக்க, டியூஷன் ஆசிரியர்கள் வழிவகைகளைச் செய்வதால், டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்குப் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆசிரியர்கள் குறுக்கு வழியில் (Fast track) பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் மறைமுகமாக உதவுவதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

சிறந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் உருவாக்குவதில், தற்போதைய பள்ளி நிறுவனங்கள் ஒரு தடையாக இருக்கிறது என்றும், இன்றைய நடைமுறைக் கல்வியில் சிறிதளவேனும் மாற்றங்கள் தேவை என்ற கருத்தும் பரவலாகப் பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.

தவறு செய்பவர்களைத் திருத்த வேண்டுமென்றால், அவர்களைத் தடுப்பதை விட, அவர்களுக்குப் புரிய வைப்பதே சரியான வழி என்பதை மக்கள் கவிஞர் அரை நூற்றாண்டுக்கு முன்பே (1957) பாடிக் காட்டினார்.

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலமடா தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா”

இவ்வாறு இதயம் தொட்ட இனிய வரிகளால், வளரும் சிறார்களுக்கு எது தீமை என்பதைப் புரிய வைக்கிறார். எதிர்காலச் சமுதாயம் சிறக்க, சிந்தனையை மழுங்கச் செய்யும் இன்றைய தரமற்ற பாடல்களின் நடுவே, இன்றும் நெஞ்சம் நீங்காத பாடலாக இடம் பெற்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொடரும்..

 

படத்திற்கு நன்றி:http://www.sdcity.edu/CollegeServices/StudentSupportResources/Counseling/AcademicCounseling

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – 6

 1. Very nice !!!… but all these things cannot be changed unless people themselves realise and work towards the change

 2. சிந்தனையை தூண்டும் கட்டுரை. பல விஷயங்கள். சிலவற்றில் என் கருத்து வேறு. நான் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர்கள் கலக்கமில்லாமல், இலக்கு நோக்கி எம்மை நடக்க வைத்தார்கள். அந்த பண்பு எப்படி மறைந்தது என்பதை ஆராயவும். அதையெல்லாம் பிறகு பார்ப்போம். நான் கேட்கும் ஒரே கேள்விக்கு சுற்றி வளைக்காத பதில், குறைந்தது ஆயிரம் பேரிடமிருந்து தேவை:பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் விடைத்தாள்களை மதிப்பீட்டுடன், மாணவர்களிடமே ஏன் அளிக்கக்கூடாது?இன்னம்பூரான்10 02 2012

 3. IF TEACHERS BEHAVE LIKE TEACHERS, STUDENTS WILL BECOME AND BEHAVE LIKE STUDENTS. STUDENT, PARENTS AND TEACHERS – ALL OF THEM SHOULD HAVE AROLE TO DO. THEN ONLY FUTURE WILL BE GOOD. MONEY IS NOT THE ONLY CRITERIA.IN LIFE. HOW YOU EARN IS ALSO MATTERS

 4. Dear Sarathi, What you have highlighted is a very serious issue that most of us have comfortably forgotten amidst our many personal issues in daily life. As rightly mentioned in your article, Cinema is one of the most influential factor leading the formation of young people’s attitude in today’s world. The other factors may be are: Electronic media, certain magazines, and papers etc. We need to come up with some concrete solutions to combat this menace.

 5. Dear Sir,As rightly said today cinema, tv, newspaper are leads the younger generation to a new world of attitude, so we need some solution to come up this menance at the initial stage itself.Thanks for writing a wonderful article. Keep on writing!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 6. இது ஒரு பயனுள்ள பதிவு. நம் முன்னோர்கள் மாதா,பிதா,குரு கடைசியில் தெய்வம் என்று ஏன வரிசைப் படுத்தினார்கள் என்றால, பிறந்த குழந்தை முதலில் தாய், இரண்டாவதாக தந்தை, கடைசியில் குருவின் உதவியால் கடவுளை அடைய முடியும மற்றும் இந்த உலகத்தை புரிந்து கொள்ளவும் இவர்களின் உதவி தேவை. சமுதாயம் என்பது நாம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களே. ஒழுக்கம் என்பது வெளியில் கற்பதல்ல. நம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். இன்றைய நாளில் நமமிடையே பலரும் நாம் பணம் சம்பாதிப்பது நம்முடைய குழந்தைகளுக்காகத்தானே என்று கூறி அவர்கள் கேட்டது, கேட்காதது என்று பலவற்றையும் உடனே வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். வெளி உலகில் அவர்கள் எதிரபார்ப்பது நடக்காதபொழுது மனதளவில் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். இன்றைய கல்வி நிறுவனங்களும் பள்ளிகளை ஒரு பணம் காய்க்கும் மரங்களாகவும், ஆலயம் போல் இருக்கவேண்டிய பள்ளிகள் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. முன்பெல்லாம் குருவானவர் மாணவர்களிடம் அன்பையும், மாணவர்கள குருவிடம் மரியாதையைம் காட்டினர். இன்று அனைத்தும் வணிகமயமாகிவிட்டது. அரசும் (அரசியல்வாதிகள்தான் இன்று கல்வித்தந்தைகளாக பரிமளிக்கின்றனர்) தன் பங்கிற்கு வரியின மீது வரி விதித்து (Additional Education Cess and Higher Education Cess) மக்களிடம் பணத்தை பறித்து தங்கள் கஜானாவை நிரப்புகின்றனர். இன்றைய நாள் வரை இந்த வரிகளை வாங்கும் அரசு தமிழகத்தில் புதிதாக எந்த ஒரு மத்திய கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவவில்லை என்பது நிதர்சனமான உண்மை!!!!!!!!

 7. Chithode is a small village nar Erode in Tamilnadu and would not be in news generally. A noble soul living here has hit the headlines of some newspaper (reported in The Hindu and Kumudam)
  Smt. Ponmani Devi, is a tamil teacher who retired from service. She states that her husband (late) Kumara Nadesa Varadappan was also a tamil teacher. Teaching is a noble profession lighting up the minds of hundreds of students thereby making them better citizens. The conditions of schools in remote villages and of those involved in teaching is somewhat pitiable as there are no basic amenities even. Yet there are teachers who have been rendering yeoman service mainly because of their nature and not being greedy.

  This woman retired after serving in Nadupalayam village in Chithode retired as HM of Gobi Municipal Higher secondary school in 1996. The school Govt. Boys school at Chithode was devoid of compound making it a place for other activities impeding the concentration of students. She donated Rs.4 lakhs for construction of compound. For constructing a library, she donated 5 cents of land on the Gobi main road. Now she has donated close to 10000 sq.ft of her land worth over Rs.40 lakhs to the State backward class welfare department for the construction of a hostel for girl students.

  She humbly stated that this to her was not an act of donation but an act done to help poor girls access quality education. It is quite unfortunate that her son who was studying MBBS died of electrocution. Anybody else would have cursed fate and would have resorted to a life of solitude but not this woman who has steely nerves and resolve to serve the society.

  Madam PONMANI DEVI deserves to be known through the World for her noble mind and action —
  இந்தத் தமிழாசிரியை ஓர் நல் வழிகாட்டி. Thank you Podhigai Rajan – Face Book (Tamil) தமிழ்.

Leave a Reply

Your email address will not be published.