விமலா ரமணி

மார்ச் 8 ஆம் தேதி வருகிறது எங்கோ தூக்கிப் போட்டிருந்த சிம்மாசனத்தை எடுத்து தூசு தட்டி பெண்ணைத் தேடி கண்டுபிடித்து அதில் அவளை உட்கார வைத்து மேடை போட்டு பெண்ணியம் பற்றி பேசி நமககு நிறைய வேலைகள் இருக்கின்ற்ன.

மகளிர் தினம் காதலர் தினம் அன்னையர் தினம் முதியோர் தினம் என்று நாம் தினங்களைக் கொண்டாடுகிறோம் கொள்கைகளைக் கொண்டாடுகிறோமா?

மறுக்கப்பட்ட கல்வி பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட பெண்மைக்கு விடுதலை ஆனால் எது விடுதலை எது எல்லை எது சுதந்திரம் என்பதில் நமக்கு நிறையக் குழப்பங்கள் அரை நிர்வாண பேஷன் ஷோக்கள் ஆடம்பரமான விருந்து விழாக்கள் பார்ட்டி என்ற பெயரில் பரவும் மேல் நாட்டுக் கலாசாரத் தாக்கங்கள் இதுவா பாரதி விரும்பிய பெண்கள் விடுதலை?

விளம்பரங்கள் , போட்டி என்ற பெயரில் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கூட ஆபாச நடனம் ஆட வைக்கும் பரிதாபம் நகைச்சுவை என்ற பெயரில் வெளிவரும் நாலாந்தர ஆபாசக் காட்சிகள் இதற்கெல்லாம் துணைபோகும் மீடியாக்கள் ……

இதையெல்லாம் இன்று பாரதி பார்த்திருந்தால் தன்னை மிதித்த யானைக்கு நன்றி சொல்லி இருந்திருப்பான். பாப்பா பாடலில் கூட வாழும் முறைமைகளைக் கற்றுத் தந்தவ்ன் அவன்

சமீபத்திய பத்திரிகைச் செய்தி:

இந்தூரில் இரண்டு சிறுமிகளை ஷிப்ட் சிஸ்டத்தில் 15 பேர் கற்பழித்திருக்கிறார்கள் உதவி உதவி என்று கதறிய அந்தச் சிறுமிகளைக் காப்பாற்ற வந்தவர்களும் தன் பங்குக்குக் கற்பழித்துவிட்டு காணாமல் போயிக்கிறார்கள்.

கல்கத்தாவில் ஒரு பெண் காரிலேயே கற்பழிக்கபபட்டிருக்கிறாள்…. சட்டத்தில் மட்டும் பெண்மைக்கு பாதுகாப்பு தரப்பட்டால் போதாது சமூகத்திலும் அவளுக்குப் பாதுகாப்புத் தேவை. இதற்குத் தேவை ஆண் பெண் இருவரின் ஒத்துழைப்பு தன் எல்லைகளை இவள் புரிந்து கொண்டால் லஷ்மணக் கோட்டை எந்த ராவணனாலும் தாண்ட முடியாது மறுபடியும் இன்னொரு பாரதி பிறந்து பெண் விடுதலை பற்றி பேச மாட்டான்

கருவிலிருந்து கல்லறை போகும் வரை இவள் சந்திப்பது அக்னிப் பரீஷைகள் ஆனால் இவளுள் இருக்கும் அக்னி வெளியே தெரிவதில்லை. பெயரில் மட்டும் அருந்ததி சுகந்தி என்று தீயினைச் சுமக்கிறாள் இவள்

நதி தான் செலலும் இடத்திற்கேற்ப தன் நிறம் மாறுகிறது காற்று தான் கடந்துவரும் பாதையின் சுகந்தத்தையோ அல்லது துர்நாற்றத்தையோ தன்னுடன் எடுத்து வருகிறது ஆனால் நெருப்பு மாசுகளை எரித்தாலும் தான் மாசின்றி சுடர்விடுகிறது பெண்ணும் இப்படித்தான் குற்றங்களை எரிப்பவள் குடும்ப நன்மைக்காக உழைப்பவள். இன்று இவள் தோற்ற்ங்கள் மாறிவிட்டன என்றாலும் பண்புகள் மிச்சமிருக்கின்றன இவைகளையாவது காப்பாற்ற வேண்டாமா?

வசந்தகாலமாக இருந்த இவள் தோற்றப் பொலிவை ஏன் இழந்தாள்?

இவள் வசந்த காலமாக என்றும் இருக்க வேண்டுமென்றால் இவளைச் சூழந்துள்ள இலையுதிர் காலம் மாற வேண்டும் புதிய நம்பிக்கைகள் துளிர்க்க வேண்டும்

இவளின் அகனிக் குளியல்களை நிறுத்தி தீமைகளைச் சுட்டெரிக்கும் புதிய ஜோதியாக இவள் சுடர் விட வேண்டும்

தீயினிலே வளர் ஜோதியாக இவள் திகழ வேண்டும்

சுடர் விடும் இந்தக் குத்துவிளக்கின் ஒளி இருளை அகற்ற வேண்டும் இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும்

மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசையை உண்மை என்று சமுதாயத்தை உணரச் செய்ய வேண்டும்

அன்று தான் உண்மையில் பெண்கள் தினம் சிறப்புப் பெறும்

அந்த்க் காலத்தில் கிராமங்களில் படிப்பறிவில்லா பெண்கள் வீட்டு நிர்வாகத்தை நடத்தி வந்தார்கள்.

எனது சிறு வயதில் எங்கள் வீட்டிற்கு (அப்போது நாங்கள் திண்டுக்கல்லில் இருந்தோம்.என் தந்தை காவல் துறை உயர் அதிகாரி ) இங்கு தான் எண்ணெய் வியாபாரம் செய்ய வள்ளியம்மை என்ற பெண்ம்ணி வருவார். காதில் பாம்படம் தொங்க கைகளில் பெரிய பெரிய கங்கணங்கள் கழுத்தில் அட்டிகை ..மாட்டு வண்டி ஜல் ஜல் என்று சப்திக்க வருவார். எங்கள் வீட்டில் அப்போது ஜே ஜே என்று கூட்டம் எப்பேர்தும் இருக்கும் என் தாயார் நிறைய நல்ல எண்ணெய் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் என்று படிக் கணக்கில் (பெரிய படி )கணக்கில் வாங்குவார்

வள்ளியம்மை எண்ணெய் ஊற்றும் அழகே தனி .பதறாமல் சிதறாமல் தனித் தனி டின்களிலிருந்து எண்ணெய்யை அளந்து ஊற்றுவர்ர் துடைத்துக் கொள்ள கையில் துணி வேறு எண்ணெய் ஊற்றிய அடையாளமே தெரியாது. அவர் போனபின் நான் கொல்லைப் புறத்தில் தனித் தனி பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து அளந்து ஊற்றி அந்த இடம் முழுவதையும் குளமாக்கி வைப்பேன் என்பது வேறு விஷயம் அந்த அளவுக்கு வள்ளியம்மை என்னைப் பாதித்திருந்தார் கடைசியில் ஒரு கணக்குச் சொலலுவார் பாருங்கள் அப்போதெல்லாம் வீசம்படி என்று ஒரு அளவு உண்டு அந்த வீசம்படி அரைக்கால்படி அரைப்படி என்று கால்குலேடர் இல்லாமல் கணினி உதவியின்றி அழகாகக் கணக்குச் சொல்லுவார் என் தாயாரும் சளைத்தவர் இல்லை தன் பங்குக்கு அவரும் வீசம்படி கணக்குச் சொல்லுவார்.

இவர்கள் எந்தப் பள்ளியில் படித்தார்கள்? எந்த கம்ப்யூட்டர் சென்டரில் பயிற்சி பெற்றார்கள்?
அநுபவப் பாடம். ரவிக்கை அணியாத வள்ளியம்மையின் அழகு கைகூப்பித் தொழ வைக்கிற அழகு. மஞசள் பூசிய அந்த முகத்தில் ஒரு தெய்வீகக் களை. நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லவோ? என்று பெண்மைக்கு இலக்கணம் சொன்னார் வைரமுத்து தன் குடும்பத்தின் தேவைகளுக்கு லிஸ்ட் எழுதும் தாய் முதலில் தன் கணவரின் தேவை குழநதைகளின் தேவை என்று லிஸ்ட் எழுதிப் பழக்கப்பட்டவள் இவள் இவள் தேவைகள் என்றும் பின்னுக்குத் தள்ளப்படுபவையே. பட்ஜட் பற்றாக் குறையில் இவள் தேவைகள் டிலீட் செய்யப் படலாம்

முல்லைக்குத் தேர் தந்தான் பாரி பெண்மைக்கு தேர் தேவையில்லை எந்தப் பாரியும் வர வேண்டாம். நீரும் வேரும் இருந்தால் போதும் பெண்மைக் கொடி படரும்‘

அன்பு நீரும் பண்பு வேரும் மட்டும் போதும் பாலியல் பலாத்காரங்கள் அற்ற சக மனுஷியை நேசிக்கிற நல் எண்ணம் கொண்ட நினைவு நல்லது வேண்டும் என்ற பாரதியின் வாய் மொழிப்படி நடக்கிற மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிற ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டும்

இத்தனை இடர்பாடுகளின் நடுவிலேயும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மறுக்கப்பட்ட கல்வி கிடைத்ததும் பொருளர்தாரச் சுதந்திரம் பெற்றதும் தன் கருத்துக்களை வெளிப்படுத்தும் தைரியம் பெற்றதும் ஒருகாரணம்

பெண் என்றால் தீ என்பதால் தானோ என்னவோ இவளுக்கு அருந்ததி சுகந்தி வசந்தி என்று பெயரிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள் போலும் தீயினிலே வளர் சோதியே என்றான் பாரதி

நெருப்பு மாசுகளை அழித்தாலும் தான் மாசின்றி சுடர் விடுகிறது அழுக்குகளை அழிக்கும் நெருப்பு தான் அழுக்கடைவதில்லை

இவளும் இப்படித்ததான் தவறுகளைத் திருத்துகிறாள் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை நிரூபிக்கிறாள் களங்கத்தைத் துடைத்து தான் கலங்கரைத் தீபமாகச் சுடர் விடுகிறாள். இவளுக்கு சமாதி கட்டி அகல் விளக்கு ஏற்றி ஆராதனை செய்யாமல் இவளை ஒலிம்பிக் தீபமாக்கி உலகெங்கும் இவளை ஒளி வீசச் செய்யவேண்டும அந்த நாள் தான் இனிய நாள் பெண்மைக்குக் பெருமை சேர்க்கும் நாள். இவளின் வசந்தங்கள் வரவு வைக்கப் படும் நாள்

அந்த நந்நாளுக்காகக் காத்திருப்போம்

*****************************************************************
வாழ்க பெண்கள் தினம் வளர்க மானுடம்

************************************************************************

படத்திற்கு நன்றி : http://www.tharavu.com/2012/03/blog-post_6153.html 

http://www.vaarppu.com/padam_varikal.php?id=14

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “காலங்களில் அவள் வசநதம்!

  1. வரவேற்கவேண்டிய கட்டுரை. முதலில் பட்டியலிடப்பட்ட இழிச்செயல்கள் புதிது அல்ல. அவற்றை ஒழிக்க சமுதாயம் ஒன்று கூடி நிற்கவேண்டும். பெண் தீ அல்ல. மலர். நான் 8ம் தேதி சொல்லியது போல:‘ஆளுமை என்பது அண்டிப் பிழைப்பவர்களை மேய்க்கும். பல நூற்றாண்டுகளாக, சமுதாயம் அந்த ஆளுமையை ஆண் இனத்திற்கு அளித்துள்ளது. போதாக்குறையாக, கருத்தரிப்பது, பெண்களை, ஆணின் கைப்பாவையாக, அமைத்துவிட்டது. இந்த சூழலிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்றத் தேவை யாதெனில்:பெண்ணின் பெருமையை ஆண்கள் சாற்றினால், பெண்களுக்கு உவகை பொங்கும். ஆண்களுக்கும் அவ்வாறே. இந்த நடைமுறையை அன்றாடம் நாம் நல்ல இல்லறங்களில் கண்டு வருகிறோம். இலக்கியமும், வரலாறும் அடிக்கடி உரைக்கும் உண்மை இதுதான். அன்பின் அரவணைப்புதான் இந்த பண்பின் மூலாதாரம்.’இன்னம்பூரான்10 02 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *