எங்கே அவன்?
தேவா
ஊரைச்சுற்றித் திரிகின்றேன்,
உண்மையைத் தேடி அலைகின்றேன்,
தூய மனிதனைக் காண விழைகின்றேன் ,
கோவிலுக்கு நித்தம் சென்றிடுவர், சாமியை வணங்கி வேண்டிடுவர்,
பூஜைகள் பல செய்திடுவர்,
பூமியை ஏய்த்தே வாழ்ந்திடுவர்,
கங்கையில் முங்கி மூழ்கிடுவர்
அடுத்தவர் பொருளைத் திருடிடுவர் ,
பெண்களின் பெருமையைப் பேசிடுவர்,
பெண் கொடுமைக்கு வித்திடுவர்,
கல்விக்கு நிதி என்று வசூலிப்பர். பல
சதிக்கு வழியைக் காட்டிடுவர்.
வார்த்தையில் தேனைக் குழைத்திடுவர்
வஞ்சனையில் தேளாய்க் கொட்டிடுவர்
பாலில் கலப்படம், காபித்தூளிலும் கலப்படம்,
தேர்தலில் வோட்டை வாங்கியவுடன், சுவிஸ்
வங்கியில் கணக்கை ஏற்றிடுவர்.
பாருக்குள்ளே நல்ல நாடு போய்
ஊருக்குள்ளே பல பாராய் மாறியது
உத்தமன் யாரும் காணவில்லை.
பித்தம் பிடித்தவனாய் அலைகின்றேன்,
சித்தனாய் மாற மனம் இல்லை,
உண்மை மனிதனைத் தேடுகின்றேன்,
நான் காய்ந்து இம்மண்ணில் வீழும் முன்னே,
தேடி வந்து அவனைக் காட்டிடுவீர்.
படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-1263179/stock-photo-black-silhouette-man-on-white.html
யாமிருக்க பயமேன், தேவா!உங்கள் மனசாக்ஷியை சொல்கிறேன்.இன்னம்பூராN