தடையற்ற கரைதல்
பிச்சினிக்காடு இளங்கோ
நானும்
கரைத்துக் கொண்டும்
கரைந்து கொண்டும்
காலி செய்து கொண்டும்
சுவாசிக்கிறேன்
இருப்பு
இருக்கும் மட்டும்
இது நீடிக்கும்
இருப்பு தீர்ந்து விடும்
என்ற
அச்சம்; ஐயம்
இது வரையில்லை
காலம் கரைக்கிறது
எனினும்
இருப்பு கூடுவதை உணர்கிறேன்
வெற்றிடம் உருவாகச்
சற்றும் வாய்ப்பில்லை
அண்மையில்
காரணம்
சாளரங்கள்
சேகரம் செய்த வண்ணமாய்
இருக்கின்றன.
வேர்களில்லாத
விளைச்சல் தொடர்வதால்
காலிப்பாத்திரமாய் மாற
வழியே இல்லை
கணங்கள் தோறும்
கரையும் பயணம்
வெற்றிடமாய் நிற்கும் வரை
காலத்தின் கருணைதான்
கை கொடுக்கும்
படத்திற்கு நன்றி:http://whatwilljennsay.wordpress.com/2011/12/26/time-is-precious
காலம் சுழலும். எனவே, வெற்றிடமும், நிறையிடமும் மாறி, மாறி வரும்.இன்னம்பூரான்