கனம்
பாகம்பிரியாள்கங்காருக் குட்டி போல்,
இடுப்பைக்
கவ்வியிருந்த மடிக் கணினிக்கு விடுதலை.
அலுவலகத்திற்கென்றே வைக்கப்பட்டிருக்கும்
அலங்கார உடைகளையும்
மாற்றியாகி விட்டது.
கைப்பேசிகள்,கணக்கெழுதும் குறிப்பேடுகள்
கச்சிதமான இடத்திற்குப் போய் சேர்ந்தது.
ஆனாலும்
ஏதோ ஒன்றை மறந்ததாய் மனம்
முணுமுணுப்பாய் சொல்லிக் கொண்டிருந்தது.
கால் சராயில்
விரல்களால் நெருடுகையில்,
கட்டாயம் அப்பா வாங்கி வருவார்
என்ற நம்பிக்கையில்
மகன் கிறுக்கிப் போட்ட
கோணல் மாணலான ‘பந்து’ என்ற துண்டுச் சீட்டு,
கனமாய் என் விரல்களை
அழுத்திக் கொண்டிருந்தது!
படத்திற்கு நன்றி:http://www.istockphoto.com/stock-photo-13053666-hand-in-business-crumpling-a-piece-of-paper.php
இயந்திர வாழ்விலிருந்து
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடப்
பந்தாய் உறுத்துவது
பாசம்தானே…!
நன்று.
-செண்பக ஜெகதீசன்…