செண்பக ஜெகதீசன்
தொட்டில் குழந்தை
தொண்ணூறைத் தாண்டியது-
அரசுச் செய்தி..
அங்கே,
தண்டவாளத்தில்
புதிதாய் ஒன்று..
இங்கே,
கருத்தரங்கம்-
கற்பு பற்றி
கருத்து மோதல்கள்…!
என்றும் இணைவதில்லை
இந்தத் தண்டவாளங்கள்…!
படத்திற்கு நன்றி:http://www.frontlineonnet.com/fl2211/stories/20050603006700400.htm
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நெத்தியடி கவிதை மிக நன்று!