கவிதைகள்

மனிதனைக் கடந்த மனிதம்..

யுகநிதி, மேட்டுப்பாளையம்
Yuganidhi
கூடித் திரிந்த
பறவைகள்..
பாடி மகிழ்ந்த
தோழமைகள்..

ஒரு நாளில்..

திசைமாறிப் போயின
எங்கெங்கோ..

இயற்கை
தன் பயணங்களில்
எழுதிக் கிழித்துப் போடும்
மாற்றங்கள் எனும்
கவிதையை யாராலும்
கோர்த்துவிட முடியுமா..?

காலங்கள்
கரைவதும்
ஆடி ஓடி விளையாடிய
நினைவுகள் கசிவதும்..
துன்புறும்போதெல்லாம்
தொட்டிலிட்டுத்
தாலாட்டுவதும்..
இளமை நேரத்துப்
பொழுதல்லவா..?

வயது ஐம்பது
ஒரு வாய்ப்பு தேடுகிறது..
நவீனம் அதற்குக்
கை கொடுக்கிறது..

பள்ளியின் தோழர்கள்
தத்தம்
பிள்ளைகளோடு ஏதோ
ஓரிடத்தில் சங்கமம்..
உள்ளமெல்லாம் சந்தோசம்..

அந்த இடத்தில்
மனிதம் கோலோச்சுகிறது
மனிதனைக் கடந்து..!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க