தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்குத் தமிழக அரசின் பரிசு

 
 
தமிழ் விக்கிப்பீடியா’ நூலுக்குத் தமிழக அரசின் பரிசு
 
 
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழில் வெளியாகும் நூல்களை 31 தலைப்புகளின் கீழ் பிரித்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த நூலைத் தேர்வு செய்து சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர்களுக்கும், நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தினருக்கும் பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் அளித்து சிறப்பித்து வருகிறது.
 

தமிழ் வளர்ச்சித் துறை கடந்த 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் 27 தலைப்புகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இந்த 27 தலைப்புகளில் கணினியியல் துறையில், நண்பர் தேனி எம்.சுப்பிரமணி எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2012 ஏப்ரல் 13ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் “தமிழ்ப் புத்தாண்டு விழா”வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதற்கான பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.

தமது முதல் நூலுக்கே பரிசு பெறும் தேனி எம்.சுப்பிரமணி அவர்களுக்கும் வெளியிட்ட மெய்யப்பன் பதிப்பகத்திற்கும் வல்லமை சார்பில் பாராட்டுகள், வாழ்த்துகள்.

 

இந்த நூல் குறித்து மேலும் அறிய இங்கே காண்க:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)

 

About அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க