தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (8)
தி.சுபாஷிணி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
(1886 -1968)
‘தொன்று தொட்டு வரும் பழக்கம், கடவுட்பணி’ என்று தேவதாசி முறைக்கு ஆதரவாக ஆண் வர்க்கம் அலட்டிய போழ்து, ‘அவ்வாறெனில் அவருடைய சகோதரிகளும் மகள்களும் இனி பொட்டுக்கட்டி கடவுட் சேவை செய்யட்டும்’ என்று தைரியக் குரல் எழுப்பியது ஒரு பெண், அன்றைய சட்டசபையில். ஒரு நிமிடம் சபையே அதிர்ச்சியில் மௌனமானது. இதன் விளைவு, தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.
அப்பெண் குரலுக்குரியவர் புதுக்கோட்டையில் உதித்த ‘புரட்சி முத்து’ டாக்டர் முத்துலட்சுமி அவர்கள். பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் மருத்துவப் படிப்புப் படித்து 1912இல் முதல் இந்தியப் பெண் மருத்துவரானார்.
1914இல் டாக்டர் சுந்தர ரெட்டியாருடன் நடந்த
திருமணத்தால், இவரது வளர்ச்சி மேம்பட்டது.
சென்னையில் 1914இல் சொந்தமாக ஒரு மருத்துவ மையம் வைத்து எளியவர்களுக்குச் சேவை செய்தார். 1926இல் பாரிசில் நடந்த அகில இந்தியப் பெண்கள் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.பின் இவ்வாண்டில் சட்டமன்ற உறுப்பினரானார். இதன்மூலம் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், சிறுவர் திருமணத் தடைச்சட்டம், பலதாரத் திருமணத் தடைச்சட்டம் போன்ற பலதிட்டங்களுக்கு வழிவகை செய்தார்.
திக்கற்ற பெண்கள், சிறுவர்களுக்கு, உண்ண உணவும் உறைவிடமும், வாழ்விற்குக் கல்வியும் ஏற்படும் வகையில் 1930இல் அவர் தொடங்கிய ‘அவ்வை இல்லம்’, இன்றும் அடையாறு பகுதியில் பெரிய கல்வி நிறுவனமாக நடைபெற்று வருகின்றது. தம் சொந்த சகோதரி புற்றுநோயால் அவதிப்பட்டதைக் கண்ணுற்ற இவர், ‘உலகப் புற்று நோய் ஆய்வு மைய’த்தை 1952இல் தொடங்கினார். இப்போது அம்மருத்துவமனை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி (1886 -1968)
‘தொன்று தொட்டு வரும் பழக்கம், கடவுட்பணி’ என்று தேவதாசி முறைக்கு ஆதரவாக ஆண் வர்க்கம் அலட்டிய போழ்து, ‘அவ்வாறெனில் அவருடைய சகோதரிகளும் மகள்களும் இனி பொட்டுக்கட்டி கடவுட் சேவை 1952 முதல் 1956 வரை சட்டமன்ற உறுப்பினரானார்.
இதனால், காந்திய அடிப்படைக் கல்வி, கிராமங்களில் தொடக்கப்பள்ளி துவங்குதல், ஆசிரியர்களுக்குச் சிறப்பான ஊதியம் வழங்குதல், 8ஆம் வகுப்பு வரை கல்வி பெறுதல் இலவசம், மற்றும் கட்டாயக்கல்வி போன்ற திட்டங்களைச் செயலாக்க முடிந்தது.
“ஜகன்மோகினி” என்கின்ற பத்திரிக்கை நடத்தியும், கதையை மொழிபெயர்த்தும், இந்து புராணங்கள் சார்பான நூல்கள் இயற்றியும் இலக்கியத் தொண்டாற்றியுள்ளார்.
விதவைகளுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் கல்விதான் ஆதாரமென்று வழிநடத்திச் சென்ற இவரை எல்லோரும் அன்புடன் “சகோதரி சுபலட்சுமி” என்று அழைத்தார்கள்.
படத்திற்கு நன்றி :
http://rajappa-musings.blogspot.in/2007/11/dr-muthulakshmi-reddy.html