வல்லமையின் வாழ்த்துகள்!
அன்பு நண்பர்களே,
வணக்கம். நம் வல்லமையின் வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த மே தின வாழ்த்துகள்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா நேற்று 29.04.2012, மாலை 5 மணிக்கு மணப்பாறை , இலக்குமி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ’அந்த நான் இல்லை நான்” என்ற தம்முடைய கவிதைத் தொகுப்பிற்கு திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் விருது பெற்றுள்ளார். திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு நம் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!
நம் வல்லமை நிர்வாகக் குழுவில் உதவி ஆசிரியராக புதிதாக இணையும் திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் அவர்களையும் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம்.
நிர்வாகக் குழுவில் தற்போது திருமதி சாந்தி மாரியப்பன் மற்றும் திருமதி காயத்ரி பாலசுப்பிரமணியம் இருவரும் உதவி ஆசிரியர்களாக தங்கள் பொறுப்புகளை ஏற்றுள்ளார்கள். நிர்வாகக் குழுவில் இணைந்துள்ள மற்றவர்களும் விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
ஆசிரியர்.