தமிழ்த்தேனீ

ஒவ்வொரு வருட மேதினமும் உழைப்பவர்
தினமே உழைக்கும் தினமே உழைப்போர் தினமே
உழைப்போரெல்லாம் உழைப்பார் தினமே
உழைப்போரின்றி உலகே இல்லை

உழவர் விதைத்தார் உணர்ந்தே அறுத்தார்

உணவாய் நமக்கே பகிர்ந்தே அளித்தார்
உண்டே நாமும் ஓங்கி வளர்ந்தோம்
குயவர் புனைந்தார் காய்த்தே அளித்தார்

கலசம் வைத்தே களிப்பில் ஆழ்ந்தோம்
உடுத்தும் உடையை நெசவர் அளித்தார்

உயர் ரகப் போர்வையும் நெய்தே அளித்தார்
மானம் காத்தார் மறைத்தே வாழ்ந்தோம்

குறவர் எல்லாம் பாயை முடைந்தே அளித்தார்
இரவில் தூக்கம் இனிதே இன்பம் எல்லாம் அளித்தார்
வீர மறவர் தேசம் காத்தார் கடுங்குளிர்
சுடுவெய்யில் தலையால் வாங்கி தாமே தாங்கி

மாற்றார் நடுங்கும் வழிவகை செய்தார்
அத்துனை நலமும் பகிர்ந்தே அளித்தார்
குடைவோர் குடைந்தே சிற்பம் நமக்கே அளித்தார்
சிலையாய் வைத்தே பக்தி வளர்த்தோம்

தேனி வளர்ப்பார் தேனை அளித்தார்
தேனை உண்டு நோயை விண்டோம்
உழைத்தே அடிப்படைத் தேவை முழுவதும்
களித்தே அளித்தார் கவடின்றி கொடுத்தார்

ஒவ்வொரு தொழிலும் உழைப்போராலே
உயர்ந்தே மிளிரும் உண்மை அறிவோம்
உழைப்பவர் உழைப்பால் உலகே உய்யும்
அவர்தம் உழைப்பால் உயர்ந்தே வாழும்

படைத்தே உலகைக் காப்பதனால்
உழைப்போர் அவரை ப்ரும்மன் எனலாம்
ஒன்றி உழைத்தே வியர்வை சிந்தி
உழைப்பின் பலனை நமக்கே அளித்தார்

உழைப்போரின்றி உலகே இல்லை
உலகை அளித்தால் அதுஈடில்லை
உவமையாய்க் கூற வேறேதுமில்லை
நன்றி நவில்வோம் வழிவேறில்லை

படத்திற்கு நன்றி:

http://www.sarisafari.com/tour/orikats.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *