தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (10)

2

 

 

சுபாஷிணி

டாக்டர் எஸ். தருமாம்பாள் (1890-1959)

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தன் சுய முயற்சியால் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 1930இல் இவர் பிரசித்தி பெற்ற சித்தமருத்துவராக மக்களிடையே அறியப்பட்டார். மாநகராட்சி உதவியுடன், சென்னை தங்கசாலையில் சித்தமருத்துவ மையம் ஒன்றை நிறுவி, ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்தார். இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஆலோசகராக இவர் விளங்கினார்.

பெரியார் ஈ.வெ.ரா கருத்துகளில் ஈடுபாடு உடையவர். எனவே துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் இவர் நடத்தி வைத்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இவர், பல செல்வந்தர்களிடம் உதவிபெற்று பெண்கள் கல்வி கற்க உதவி புரிந்தார். தம் பூர்வீக வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார். 1940இல் தமிழாசிரியர்களின் ஊதிய உயர்விற்கும், அவர்களது சமூக மரியாதைக்கும் அரசுடன் போராடி இவர் வெற்றி பெற்றார். தமிழிசை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். இவர் மேலும்,
பள்ளி மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றலுக்காக,‘சென்னை மாணவர் மன்றம்’ எனும் அமைப்பில் 10 ஆண்டுகள் தீவிரமாக உழைத்தார். ‘வீரத்தமிழன்னை’ என்ற விருது இவரைத் தேடி வந்தது.

இவர் ஈ.வெ.ரா அவர்களுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்கின்ற பட்டத்தையும், எம்.எம்.தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ என்கின்ற பட்டத்தையும் வழங்கி மகிழ்ந்தார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (10)

  1. dharumambal information is enough for only to write answer to a 5 mark short question. i need an essay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *