குயில் வருமா?
ஐயப்பன் கிருஷ்ணன்
குயிலின் ஓசைக்கு உதவுவதாய் எண்ணி
குழலை எடுத்து ஊதப் போனான்…
குழல் மட்டும் போதாதென்று கூடவே மத்தளம்
வேணுமென்றான்
மத்தளம் வேகம் அதிகரிக்க
குழலின் ஓசையும் கூக்குரலாக
பாவம் குயிலும் பறந்து போனது
குயில் மீண்டும் வருமென எண்ணி
குழலூத அவன் காத்திருக்கிறான்
மத்தளக்காரனும் மருகி நிற்கிறான்
மருண்ட குயில் மறுபடி வருமா என
மரத்தில் இலைகள் சலசலக்கின்றன
படத்திற்கு நன்றி
http://flutesndrumsdonaghadee.webs.com/
இயல்பான நிகழ்வுகளை அப்படியே ரசிக்காமல், அதை மேம்படுத்துவதாய் எண்ணி, உபத்திரவத்தில் முடியும் சிலரது செய்கைகளை சொல்வதாய் உணர்ந்து ரசித்தேன். நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.