கவிதையும் படமும்: ரேவதி நரசிம்ஹன்

Grill_Gate

திறக்கும் கதவுகளுக்குப் பின் நிற்கும் விழிகள்
சில சமயம் அன்பு
சில சமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சில சமயம் வரவேற்பு.

எல்லாவற்றுக்கும் மௌன சாட்சி.

கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத மனங்கள்.

பாட்டியின் காலத்தில் கதவை மூடிய நாள்கள் இல்லை
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.

அவள் மன உரமே
அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலைவாசலை விட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன
வெள்ளியும் வைரமும் தங்க ஒட்டியாணமும்.

இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.

பக்கத்து வீட்டுப் பழனி மேலும் காவல்.
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
”அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.”

இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஓர் அதிர்ச்சி 🙁

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “கதவுகள்

  1. //திறக்கும் கதவுகளுக்குப் பின் நிற்கும் விழிகள்
    சில சமயம் அன்பு
    சில சமயம் கேள்வி
    சில சமயம் மறுப்பு
    சில சமயம் வரவேற்பு//

    ஆரம்ப வரிகளே மிக அற்புதம்.

    நல்லதொரு கவிதை வல்லிம்மா. தொடருங்கள்!!

  2. என்ன இருந்தாலும் வீட்டிலே பெரியவங்க இருந்தால் அந்த சுகமே தனிதான் வல்லி. அதை அழகா எடுத்துச் சொல்லி இருக்கீங்க உங்க கதவுகளின் மூலம். இங்கே நாங்களும் பகலில் இப்படித் தான் பூட்டி வைக்கிறோம். 🙁

  3. மிகவும் எளிமையான வரிகள், ஆனால் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் தந்து செல்கின்றது. வாழ்த்துக்கள் வல்லிம்மா!..:)

  4. அன்பு கீதா, கருத்தைப் பிடித்தீர்கள்.
    பெரியவர்கள் பலமே தனி.
    அவர்களின் ஆசீர்வாதங்களில் தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    இங்கு வந்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.

  5. அன்பு தக்குடு,

    மனக்கதவுகளின் கதை சொல்லப் போய் நிஜக் கதவுகளையும் சொல்லிவிட்டேன். மிகவும் நன்றி மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.