நமீதா, தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!

0

Namitha

நமீதா… போகுமிடமெல்லாம் இவருக்குக் குவியும் ரசிகர் கூட்டம், நிச்சயம் அரசியல் கட்சிகளை யோசிக்க வைக்கும்!

ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நமீதாவுக்கு, அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு சேர, “தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி” என்ற பட்டத்தைச் சூட்டினர்!

Namithaசென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது. இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துகளைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் பிரபல நடிகை நமீதா கலந்துகொண்டார். அவரைக் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரை புரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், ‘தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா’ என குரல் எழுப்ப, அதை அப்படியே அனைத்து மாணவர்களும் எதிரொலித்தனர்.

திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப் பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா, தனக்கு மாணவர்கள் சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது அன்பு முத்தங்களை காற்றில் பறக்கவிட்டார். அதைக் கண்டு, மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும் ஆர்ப்பரித்தனர்.

அதன் பிறகு நிகழ்ச்சியை நமீதா வெகுநேரம் அமர்ந்து ரசித்தார். அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி எனப் பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

============================

தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *