ராமஸ்வாமி ஸம்பத்

முந்தைய பகுதி வாசிக்க:

“தாத்தா, நம் குடிலுக்கு இன்று என் தந்தையாரை அழைத்து வந்திருக்கிறேன்,” என்று வீட்டுக்கு வந்த மாறன் பாட்டனாரின் செவியில் உரைத்தான்.

“என்ன, மாலடியானா வந்திருக்கிறான்? அந்தப் பாஷாண்டி இங்கு எங்கே வந்தான்? முதலில் அவன் ’மால் பகைவன்’ என்று பெயரை மாற்றிக்கொள்ளட்டும். சமயத்தையும் பெயரையும் மாற்றிக்கொள்வது இந்த முல்லைத்தேவனுக்குக் கை வந்த கலைதானே,” என்று சீறினார் நம்பி.

மாறனுக்கு பாட்டனார் தன் மருமகன் மீது ஏன் இவ்வளவு சீற்றம் கொள்கிறார் என்று புரியவில்லை.

”மாமா, என் மீது தங்கள் சினம் நியாயமானதே. உங்களையெல்லாம் பிரிய நேர்ந்தது என் போறாத காலம்தான். மாலவனின் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு அப்போது வேறு வழியில்லாமல் போய்விட்டது,” என்றான் மாலடியான்.

“மாலவன் பணி… ஹும்!” என்று ஏளனம் செய்த நம்பி, மாறனிடம் “கிருமிகண்டன் பணி என்று சொல்லச்சொல்” என்றார். “இத்தகைய குலத் துரோகிகளை நாம் நெருங்க விடக் கூடாது. சூலுற்றிருந்த இளம் மனைவியையும் வயது முதிர்ந்த மாமனையும் தவிக்க விட்டுக் கிருமிகண்டன் சேவையே பிரதானம் என்றிருந்து அந்த மால் பகைவனின் ஆணைப்படித் திருச்சித்திரக்கூடத்துக் கோவிந்தராஜரின் மூர்த்தம் கடலில் எறியப்படுவதற்குத் துணை நின்ற இவனை எவ்வாறு மன்னிப்பது?“

“மாமா, உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அடியேனுக்கு எல்லாவற்றையும் விளக்க ஒரு வாய்ப்புக் கொடுங்கள். அதன்பின் என்னைப்பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள்,” என்று இறைஞ்சினான் மாலடியான்.

கோபத்தால் சோர்வுற்ற நம்பி மேலே ஏதும் சொல்லவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, தன் விருத்தாந்தத்தைக்கூற ஆரம்பித்தான் மாலடியான்.

 

படத்திற்கு நன்றி:http://chennaionline.com/Religion/Temples/Chidambaram–a-divya-dEsam/20102515032546.col

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “உறவேல் ஒழிக்க ஒழியாது! (பகுதி-2)

 1. கிருமிகண்டன் சேவையே பிரதானம் என்றிருந்து அந்த மால் பகைவனின் ஆணைப்படித் திருச்சித்திரக்கூடத்துக் கோவிந்தராஜரின் மூர்த்தம் கடலில் எறியப்படுவதற்குத் துணை நின்ற இவனை எவ்வாறு மன்னிப்பது?“//

  ஆஹா, காத்திருக்கேன் அடுத்த பதிவுக்கு. சட்டுனு இது முடிஞ்சு போயிருக்காப்போல் ஒரு எண்ணம். இன்னும் பெரிய பதிவாக் கொடுத்திருக்கலாமோ??

 2. //சட்டுனு இது முடிஞ்சு போயிருக்காப்போல் ஒரு எண்ணம்.//

  அப்படியேதான் எனக்கும் தோன்றியது. தொடரக் காத்திருக்கிறேன்…

 3. நல்ல தொடர்ச்சி. ஆனால் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்.

 4. இணைய தள வாசகர்கள் அனைவருக்குமே பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு புத்தகம் அல்லது பத்திரிகையைப் படிப்பதைப்போல் மின் இதழ்களில் இடம்பெறும் செய்திகளைத் தொடர்ந்து படிக்க வாசகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எழுத்தாளரின் தகவல்கள் பெரிதாக இருந்தால், வாசகர்கள் அடுத்த செய்திகளுக்குத் தாவி விடுவார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எழுத்தாளர் தான் சொல்ல வந்த கருத்தைச் சுருங்கச் சொன்னால் அதுவும் நன்று.

  ஆதலால், எழுத்தாளர் திரு ராமசாமி சம்பத் அவர்கள் ஒரு பக்கம் எழுதியது பற்றி, திருமதி கீதா சாம்பசிவம், திருமதி கவிநயா, திரு மனோகர் அவர்கள் குறுந்தொடர் பற்றிக் கருத்துக் கூறியது, சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று.   

  தொடராக வெளிவரும் ஒரு கட்டுரையோ அல்லது கதையோ, வாசகர்களுக்கு அடுத்து இடம்பெறும் தொடரில், எழுத்தாளர் என்ன சொல்லப் போகிறார்?…..என்ற சிந்தனையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தினால் மட்டும் போதும் என்பதே என் மனதில் உதித்த கருத்து.

  மாலடியான் சொன்ன “மாலவன் பணி” என்னவாக இருக்கும்?…. என்ற சிந்தனையோடு அடுத்த தொடரைத் தொடருவதும் நன்றே!.

  பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *