அதிரடித் தீர்ப்பு
குமரி எஸ். நீலகண்டன்
விவாகரத்து கேட்டு
வந்தனர் இருவரும்..
இயல்பினில் இருவரும்
இரண்டு திசைளென்றனர்.
நீ இந்தப் பக்கமாகவும்
நீ அந்த பக்கமாகவும்
சென்று விடுங்களென்றார்
கடுமையாய் வழக்கறிஞர்.
சிறிது வளைந்தும்
செல்லுங்கள் உங்கள்
பாதையில் என்றார்.
உங்கள் வளைவுகள்
ஒரு வட்டமானால்
வாருங்கள் இங்கே
விருந்து வைக்கிறேன்
என்றார் வழக்கறிஞர்.
//உங்கள் வளைவுகள்
ஒரு வட்டமானால்//
நல்ல வழக்கறிஞராகப் பெயர் எடுப்பதை விட நல்ல மனிதராக வாழ ஆசைப்படுபவர். வளைவுகள் வட்டமாகட்டும்.
நல்ல கவிதை. நன்றி.