சட்டம் ஆலோசனைகள் (11)
மோகன் குமார்
கேள்வி: சௌந்திரராஜன் – சென்னை
ஒரு வழக்கு தொடரப்பட்டு, பிரதிவாதியிடம் எந்த விசாரணையும் நடைபெறாமல், ஒருதலைபட்சமாக தீர்ப்புக்கூறி, திரும்பவும் அந்த வழக்கு நீதிமன்றம் வந்தபோது அந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது. அது பற்றி ஆய்வு செய்த போது பிரதிவாதியின் வழக்கறிஞர், வாதியின் வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு வாதிக்கு ஏற்றாற்போல மனுவை அளித்திருக்கிறார் என்ற தகவலும் காலம் கடந்து கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரதிவாதிக்கு உரிய நியாயமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:
ஒரு தலை பட்சமாக வழக்கில் தீர்ப்பு வந்தால் அதற்கு பதிலாக செட் அசைட்(Set aside) பெட்டிஷன் போடலாம். அது போடப்பட்டதா என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரியவில்லை. லிமிடேஷன் சட்டம் பிரிவு 5-ன் கீழ் செட் அசைட்(Set aside) பெட்டிஷன் போட கால தாமதம் ஆகியிருந்தாலும், தாமதத்துக்கான சரியான காரணம் சொல்லி வழக்கு போடலாம். நீங்கள் உடனடியாக நல்ல வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
ஐயா, எனது மூதாதையர் சொத்தில் பாகப்பிரிவினை கோரும் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது பிளைன் அமென்மெண்ட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன ? அதற்கு அடுத்த நடவடிக்கை என்ன ? எனது வழக்கறிஞர் மீது எனக்கு திருப்தியில்லை. வழக்கறிஞரை மாற்றுவதென்றால் என்ன செய்ய வேண்டும் ? வழக்குக் கட்டை திருப்பித் தர மறுத்தால் என்ன செய்ய வேண்டும் ?