செண்பக ஜெகதீசன்

காதலைக்
காலில் மிதித்துவந்த
கல்யாணம்..

கல்லானாலும் கணவனாம்-
கச்சிதமான ஜோடிதான்..

கல்லாய்த்தானே ஆகிவிட்டது
அவள் இதயமும்..

ம்,
வீட்டுக்கு வீடு
வாசல்படிதான்…!

படத்திற்கு நன்றி :

http://www.freeinspirationalquotes.info/inspirational-love-quotes?page=1

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கல்லாய்…

 1. அய்யா
  நறுக்குத் தெறித்தாற் போல் பத்தே வரிகளில் ஒரு நாவலையே முடித்து விட்டீர்.
  எப்படியென்று கேட்கிறீர்களா?
  காதல் தோல்வி – வேறொருவருடன் திருமணம் – அப்போதும் கணவன் மேல் பாசம் – அவ்வப் போது பழைய ஞாபகம் தலை துாக்காதிருக்க கல் இதயம். இறுதியில் இலு எல்லோர் வாழ்க்கையிலுத் உண்டு என்று தத்துவம்.

  அபாரம்.

 2. ஆழ்ந்த ரசனையுடன்
  அனுபவ மற்றும்
  ஆக்கபூர்வமான
  முகிலின் பாராட்டுரைக்கு
  அகமகிழ்ந்த நன்றி…!
         -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.