சட்டம் ஆலோசனைகள் (8)
மோகன் குமார்
கேள்வி: செந்தில் குமார்
நான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். திருமணமாகி சுமார் ஒரு வருடம் வரை, தாய் தந்தையுடன் வசித்தோம். கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடம் கழித்து நானும், என் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றோம். பெற்ற தாய் தந்தைக்கு மாதந்தோறும் ரூ.3500 தவறாமல் கொடுத்து வருகிறேன்.
நான் வீட்டிலிருந்து வரும் போது எந்த சொத்தையும் நான் எடுத்து வரவில்லை. ஆனால் என் தம்பி ரூ.50000 கேட்டு என்னை தொடர்ந்து மிரட்டுகிறான். இதனை நான் எதிர் கொள்ள என்ன வழக்கு தொடர வேண்டும்?
பதில்
நீங்கள் உங்கள் பெற்றோரின் சொத்து எதையும் எடுத்துக் கொள்ள வில்லை. தற்போது அவர்களின் சொத்தில் தங்கியிருக்கவும் இல்லை இந்நிலையில் உங்கள் தம்பி உங்களை மிரட்ட என்ன காரணம் ? அவர் நல்ல வேலையில் இல்லாததால், உங்களிடம் பணம் பெறும் ஒரே நோக்கோடு மட்டுமே இப்படி மிரட்டுகிறார் என நினைக்கிறேன்.
நீதிமன்றத்தில் உங்கள் தம்பி மேல் உங்களை மிரட்டுகிறார் என வழக்கு தொடர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்கு முன் உங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் தாருங்கள். காவல் துறையினர் உங்கள் தம்பியை கூட்டி மிரட்டினாலே அவர் உங்களிடம் பின்னர் பணம் கேட்பது நின்று விட வாய்ப்பு உண்டு.
அதற்கு பின்னும் அவர் இதே நடவடிக்கையை தொடர்ந்தால், காவல் துறையினரிடம் சொல்லி, முன்னர் தந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து வழக்கும் தொடரலாம்.
உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.