நினைவுகள்
பத்மநாபபுரம் அரவிந்தன்
திடீரென்று சம்மந்தமே இல்லாத
பொழுதொன்றில் உன் நினைவுகள்
எழுந்து விரிகிறது மனதில்
இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்…
எப்படி இருக்கிறாய் எதுவுமே
தெரியாத போதிலும் ..
கற்பனையில்
துல்லியமாய்த் தெரிகிறாய்
அதே சிரிப்பு.. நிஜத்தில் ஒரு வேளைமாறியிருக்கலாம்
ஆனால் என் மனதினுள் அப்படியே
இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த உன்
முகமும், பேச்சும், சிரிப்பும் சற்றும் மாறாமல் பளீரிடுகிறது .
..
கல்லூரி வளாகத்தில் முந்திரி மரத்தில் சாய்ந்து
என் விரல்களைக் கோர்த்தபடி
நீ சொன்ன வார்த்தைகள் இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும் ஏன் வந்தது என் நினைவில் மீண்டும்?
விரக்தி நேர்கையில் சுகங்களாய்க்
கழிந்த பொழுதுகளை மீண்டும்
மீட்டெடுக்கத் துடிக்கிறதோ மனம் ?
எங்கிருந்தாலும் என்னைப்போல்
உனக்கும் என்றாவது தோன்றுமோ
நாம் தவறவிட்ட வாழ்வின் சுகமான
பொழுதுகளை நினைக்க……
படத்திற்கு நன்றி:
http://www.desicolours.com/can-we-save-south-indias-traditional-wear-from-vanishing/11/07/2009
இதென்ன அதிசயம்….நான் நினைத்ததையெல்லாம் அப்படியே நீர் எழுதியிருக்கின்றீர்.
ஓ…எல்லோர் வாழ்க்கையிலும் அந்த அத்தியாயம் இருக்கும் போல…
மிக்க நன்றி .. முகில் தினகரன்… அநேகமாக எல்லோருக்கும் இது போன்ற எணணங்கள், நினைவுகள் இருக்கும் என்பது என் ஊகம் – பத்மநாபபுரம் அரவிந்தன் –
good poem takes you to your youth