சொட்டவாளக்குட்டி!

 

ஊடக நண்பர்களுக்கு வணக்கம்
களவாணி, வாகை சூட வா திரைப்படங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவை தொடர்ந்து, நான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு சொட்டவாளக்குட்டி என பெயரிட்டுள்ளேன். இதில் தனுஷ் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அழகான காதல் கதையை முழுநீள நகைச்சுவையுடன் திரைக்கதை அமைத்துள்ளேன். இந்த படத்தை குரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளத்தை தொடர்ந்து தனுஷை வைத்து இவர் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. நாகர்கோவில்,திண்டுக்கல், ஓசூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வரும் செப்டம்பர் முதல் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

நன்றி

இப்படிக்கு
சற்குணம்

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க