சு. கோதண்டராமன்

கணபதி முருகன் வேறானாலும் சைவம் என்பது ஒன்று
 விட்டுணு சிவனுடன் வேறுபட்டாலும் இந்து என்பது ஒன்று
 இந்து இஸ்லாம் வேறானாலும் தெய்வம் என்பது ஒன்று
நலமும் தீங்கும் வேறானாலும் கடவுள் தருவதால் ஒன்று
 ஆணும் பெண்ணும் வேறானாலும் மனிதர் என்பதால் ஒன்று
 வறியர் செல்வர் யாரானாலும் வலியின் வேதனை ஒன்று
 கீழோர் மேலோர் யாரானாலும் மரணம் என்பது ஒன்று
  மனிதர் மிருகம் வேறானாலும் பசியும் தாகமும் ஒன்று
  மலையும் மடுவும் வேறானாலும் தாங்கும் பூமி ஒன்று
  நதியும் கடலும் வேறானாலும் தண்ணீர் என்பது ஒன்று
  பூமி சூரியன் வேறானாலும் ப்ரபஞ்சம் என்பது ஒன்று
  வேற்றுமைகள் வெளியே காணினும் உள்ளே ப்ரம்மம் ஒன்று

படத்துக்கு நன்றி

http://www.repedia.ca/agents/omid.html
 

1 thought on “இரண்டல்ல ஒன்றுதான்

  1. இவ்வுலகில் எல்லாமே தனித்தனியாக இருந்தாலும்…ஊன்றி நோக்கும் போது எல்லாமே ஒன்றுதான்…என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்.

Leave a Reply

Your email address will not be published.