இலக்கியம்கவிதைகள்

இந்தியனா?!.

செண்பக ஜெகதீசன்

வெட்டிச் செத்தவன்

பிணத்தை வாங்க

வெட்டச் சொல்கிறான்

பிணக்கிடங்கில்..

யாரை வெட்ட…!

 

முன்பின் தெரியாத

முனிசிபாலிட்டி கிளார்க்

கவனிக்கச் சொல்கிறான்..

எதைக் கவனிக்க…!

 யானை வெயிலில் நிற்குது நோயில்,

மாட்டு அதிகாரி

வெயிட் வைக்கச் சொல்கிறான்..

யானைக்குமேலும் வெயிட்டா…!

 நடுரோட்டில் வழிமறித்து

நிறுத்திக் கேட்கிறான்

நித்தம் மாமூல்..

மாமூலாய் உள்ளதா…!

 என்ன இது,

இன்னும் புரியவில்லையா..

இந்தியனா நீ…!

http://indianfusion.aglasem.com/?p=457 

      

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    சமூக அவலங்களுக்கு சாட்டையடி தரும் வரிகள். ஹூம்….திருந்தவா போகிறது சமூகமும் சரி…நாடும் சரி,

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க