விலை ஏற்றம்

எல்லாப் பொருள்களின் விலைகளும்   ஏறிக்கொண்டே போகின்றன . குறிப்பாக எரிபொருள் எனப்படும் பெட்ரோல் டீஸல் ஆகியவற்றின் விலை  . அவற்றை அடிப்படையாக வைத்தே நாட்டுப் பாதுகாப்பு , குடிநீர், உணவு ,ஆடை, உடல்நலப் பாதுகாப்பு, மற்றும் பொழுது போக்கு தொடர்பான எல்லா நுகர் பொருள்களும்  உற்பத்தி  , விநியோகம்  ஆகவேண்டும் . ஓர்இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பொருள்கள் நகர்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு வாகனங்கள் .. அவற்றை இயக்கத் தேவையான எரிபொருள் வேண்டும்

இப்படி நவீன வாழ்க்கையின் சக்கரம் எரிபொருள் தொடர்புடையதாகி எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. எரிபொருள் விவசாயம் செய்ய முடியாது

பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன் பூமிக்கு அடியில் புதைந்து போன காட்டு மரங்களும் தாவரங்களும் அழுகி ரசாயன மாற்றம் பெற்று உருவான பேங்க் தான் நமக்கு பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றை அளிக்கிறது, பேங்க் சிறுகச் சிறுக திவால் ஆகிக் கொண்டே வருகிறது .

அறிவியல் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது

நாம் அலட்சியம் செய்து கொண்டே இருக்கிறோம்.

சமீபத்தில் எண்ணெய் விலையேற்றம் ஒரே ஒரு நாள் தான் என்றாலும் என்ன பாடு படுத்தி விட்டது  

விலை ஏற்றம் குறித்து கோஷம் போட்டு முதலாளித்துவ சதி அது இது என்று போராடி பூமியின் பாங்க்கின் உள்ளே எரிபொருளை நிரப்பி விட முடியாது. மாற்று எரிபொருள் வேண்டும் என்று அணு உலை தேடி அபாய கூக்குரல்கள் எழுவதை அலட்சியப் படுத்த முடியாது.

அதிகமான பேர் அதிகமான தேவைக்கு மிஞ்சிய சொல்லப்போனால் ஊதாரித்தனமாக எரிபொருள் செலவு செய்வதால் அதற்கு பஞ்சம் வருகிறது விலை ஏறுகிறது.

எரிபொருள் செலவை எப்படி எப்படி எல்லாம் குறைக்கலாம் ; குறைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை நமது முதல் தேவை. விழிப்புணர்வல்ல . எல்லோரும் விழிப்புணர்வோடு தான் இருக்கிறோம். எரிபொருள் சிக்கனத்திற்கு மட்டும் நாம் தயார் இல்லை. அரசுத்துறையில் கூட எரிபொருள் சிக்கனம் குறித்து அகில இந்திய அளவில் எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லை.

விலை ஏற்றத்தை குறைந்த பட்ச அளவேனும் தடுக்கிற உத்தி சிக்கனம் தான். நம்மளவில். நம் குடும்ப அளவில் . நம் தெரு அளவில் . நம் ஊர் அளவில். எரிபொருள் சிக்கனத்திற்கு சின்னஞ்சிறு முயற்சி எடுத்தாலும் அந்த அளவில் எந்த விலை ஏற்றத்தையும் தவிர்க்கலாம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *