மாருதியில் மேனேஜர்களுக்கு அடி, வெட்டு ! என்ன நடக்கிறது? ஒரு பார்வை

0

மோகன் குமார்

டில்லியிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில், ஹரியானா மாநிலத்தில் உள்ளது மனேசர் என்கிற ஊர். இங்கு தான் மாருதியின் தொழிற்சாலை உள்ளது. மாருதி Swift கார் இந்த தொழிற்சாலையில் தயார் ஆகிறது. 

ஒன்பது மாதங்களுக்கு முன் இதே தொழிற்சாலையில் மிக பெரும் ஸ்ட்ரைக் நடந்து பல வாரங்கள் மூடப்பட்டிருந்தது. இம்முறை அதை விட பெரிய வன்முறை.  காயம் பட்ட 26 ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதில் ஒரு ஜப்பானியரும் அடக்கம். இரு காலும் பிராக்சர் ஆகி தீயில் சிக்கி ஒரு ஊழியர் இறந்தே விட்டார்.  வன்முறையில் ஈடுபட்ட தொண்ணூறு ஊழியர்கள் ஜெயிலில்…! 

இப்போது நிறுவனம் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. 

மாருதி நிறுவனத்துடன் ஜப்பானிய நிறுவனமான சுசுகி (Suzuki) மோட்டார் நிறுவனம் இணைந்து Joint Venture முறையில் இந்த நிறுவனம் இயங்குகிறது.

வெளி நாட்டினரை பொறுத்த வரை எப்போதுமே ஊழியர்களின் safety-க்கு தான் மிக அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஒரு ஊழியர்க்கு தயாரிப்பில் அடிபட்டாலே, இனி யாருக்கும் இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்வது என பல வாரங்கள் பேசி, ஊழியர்களுக்கு அது பற்றி நிறைய பயிற்சி தருவார்கள். இத்தகைய வன்முறை, அதுவும் ஒரே நேரத்தில் பல மேனேஜர்கள் தாக்கப்பட்டது வெளி நாட்டு முதலீட்டாளர்களை பெரும் அளவு மனதைப் பாதித்திருக்கும்.

ஒரே ஒரு ஊழியர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் துவங்கி உள்ளது எல்லா பிரச்சனையும் ! 

ஜியாலால் என்கிற  ஊழியர் ஒரு வாய்ச்சண்டையில் ராம்கிஷோர் என்கிற மேனஜரை அன்று காலை அறைந்து விட்டார். இதனால் ஜியாலால் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் பேசி உள்ளது. இதில் கோபமான ஊழியர்கள் production-ஐ நிறுத்தி விட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். பின் மதிய ஷிப்ட்டுக்கு வந்த  ஊழியர் கூட்டமும் சேர்ந்து விட அனைவரும் சேர்ந்து 700 கம்பியூட்டர், மற்றும் சர்வர்(Server) -களை எரித்துள்ளனர்.

மெசனைன் பிலோர் என்று சொல்லப்படும் முதல் மாடியில் தான் உயர் அதிகாரிகள் அனைவரும் அமருவார்களாம். அங்கு   நுழைந்த கூட்டம் அனைவரையும் சேர் மற்றும் இரும்பி கம்பியால் தாக்கி இருக்கிறது. பின் சில இடங்களுக்கு தீயும் வைத்து விட்டது. இவர்கள் அடித்ததில்  இரு கால்களும்   பிராக்சர் ஆன  அவனிஷ் குமார் தேவ் என்கிற மேனேஜர்  தீயில் சிக்கி இறந்து விட்டார். 

லாக் அவுட் ஆன நிறுவனம் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை. குறைந்தது இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இதனால் நிறுவனத்துக்கு 15 கோடிகள் நஷ்டம்! ஆனால் நிறுவனம் இப்போது பணத்தை பெரிதாய் நினைக்காது. ஊழியர்களின் மனதில் உண்டான தாக்கம், பயம் சரியாவது தான் முக்கியம் ! 

ஊழியர்கள் நிர்வாக முடிவுகளுக்கு மேனஜர், வி.பி போன்றோரை காரணமாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயம் ! எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்கிற கதை தான். மேலும், வன்முறை நிச்சயம் இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. இது போன்ற பிரச்சனையில் தாக்கியவர்கள் ஜெயிலுக்கு போய் விட முக்கிய பிரச்சனை திசை திரும்பி விடும்.

உண்மையில் இது போன்ற நேரத்தில் தான் காந்திய வழிகள் பயன்படும்.  ஊழியர்கள் தினமும் நிறுவனம் வந்து உள்ளேயே அவர்கள் தங்கள் போராட்டத்தை அமைதியாக தொடர்ந்திருந்தால் நிர்வாகம் இறங்கி வந்திருக்கும். 

கடந்த ஒரு வருடத்தில் மூன்று முறை மாருதியின் பனேசர் பிளான்ட் மூடப்பட்டது மிகப் பெரும் கருப்பு புள்ளி. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா மீதான நம்பிக்கை குலையாமல் இருக்கும். எல்லா விஷயத்திலும் தூங்கி வழியும் மத்திய அரசு உடனே இதை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *