மோகன்குமார் 

கேள்வி: பிரபாகரன், சென்னை 

சட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா. 

பதில்: 

பொதுவாய் ஒருவருக்கு கடன் தந்துள்ளீர்கள் என்றால் அதனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப பெறவேண்டும். லிமிடேஷன் சட்டத்தின் படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் எத்தனை ஆண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் படி கடனை திரும்ப பெற அல்லது அவர் கடன் திரும்ப செலுத்த வில்லை என அவர் மீது வழக்கு தொடர மூன்று ஆண்டுகள் தான் கால அவகாசம். 

ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் எப்போது தொடங்குகிறது என்பதற்கு சில விதிகள் உண்டு. 

உங்கள் தந்தையிடம் அவர் கடன் பெற்றது   10.06.2009  என வைத்து கொள்வோம். அதன் பின் அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஒரு முறை வட்டியோ அல்லது Prinicipal-ல் சிறு தொகையோ தந்தால், அப்படி அவர் கடைசியாய் பணம் தந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும். 

அது போலவே உங்கள் தந்தை அவரை பணம் திரும்ப தர சொல்லி கடிதம் எழுதி, அதற்கு அவர் இன்ன தேதியில் பணம் திரும்ப தருகிறேன் என பதில் கடிதம் தந்திருந்தால் அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அவகாசம் துவங்கும். இதற்கு  ” Acknowledging the  debt” என்று சொல்வார்கள் (உங்கள் தந்தை எழுதும் கடிதம் இங்கு முக்கியமில்லை. அவர் எழுதும் பதில் கடிதமே முக்கியம்). 

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது அவர் எந்த பணமும் தரவில்லை அல்லது கடனை ஒப்பு கொண்டு சமீபத்தில் எந்த கடிதமும் தர வில்லை என்பது தெரிகிறது. 

சிவில் முறையில் நீங்கள் வழக்கு தொடர வேண்டுமெனில், அவரது கடனை உறுதி  செய்யும்படி  அவரிடம் தற்போதைய தேதியில் ஒரு கடிதமோ, அல்லது அவர் கடனுக்கு சிறு வட்டியோ  தற்போது வாங்கினால் மட்டுமே நடக்கும். இவை முடியாத பட்சம் சிவில் வழக்கு தொடர முடியாது . 

ஆனால் உங்களிடம் பணம் வாங்கி கொண்டு தராமால் ஏமாற்றி விட்டார் என அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும். இதற்காக அவர் மீது ஒரு வக்கீல் நோட்டிசு அனுப்பினாலே அவர் உடனே இறங்கி வர வாய்ப்புண்டு. 

நீங்கள் உடனே ஒரு வழக்கறிஞரை ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும்

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சட்டம் ஆலோசனைகள் (14)

  1. ஐயா, சொத்து விற்பனையில் லிமிடேஷன் ஆக்ட் என்பது எவ்வள காலம் ? ஒருவருக்கு உரிமையுள்ள சொத்தை வேரொருவர் ஏமாற்றி விட்டுவிட்டால் அதில் லிமிடேஷன் ஆக்ட் எவ்வளவு காலம் ?

Leave a Reply

Your email address will not be published.