பத்மநாபபுரம் அரவிந்தன்            

நீ என்றைக்கும் அமர்ந்து செல்லும்
அப் பேருந்தின் இருக்கையில்
வேறொருத்தி அமர்ந்திருந்தாள் அன்றைக்கு
உனக்காகக் காத்து நின்ற எனக்கது
பெருங் கவலைத் தந்தது ..

நெற்றியில் தவழும் கூந்தலை
வலக் கையால் விலக்கி விட்டுக்
கடைக் கண்ணால் நீ சிந்தும்
புன்னகைக்குப் பிற்பாடே
அன்றைய என்பொழுது
விடிந்ததாக அர்த்தம் ..
கண்களால் புன்னகைக்கும்
பெரு வித்தை கற்றிருந்தாய்  நீ ….

தொடர்ந்து நான் காத்திருந்து
சிலவாரம் சென்றபின்பு கண்டேன்
உன்னை வேறொரு பேருந்தில்
மற்றொருவன் அருகிருக்க

நெற்றி வகிடில் குங்குமமும்
புது மஞ்சள் தாலிக் கயிறும்
ஜரிகைப் பட்டின் பளபளப்புமாய்
நீ என்னை நேராகப் பார்த்தாய்
உன் கண்களன்று புன்னகைக்கவே இல்லை.

படத்துக்கு நன்றி

http://djlobo.com/calendar/sad-heartbroken-pictures&page=2

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இழப்பு

  1. சார்….உண்மையைச் சொல்லுங்க …என்னோட அனுபவங்களை எல்லாம் நீங்க எழுதறீங்களே…எப்படி?

  2. வாழ்கையில் எல்லோருக்குமே பல அனுபவங்கள் ஒரே போல அமைய வாய்ப்புகள் உள்ளது … யார் அதனை பகிர்ந்துக் கொள்கிறார்களோ அவர்களை , .. இது எனக்கும் நிகழ்ந்தது தானே என எண்ண வைக்கிறது .. எனக்கு நிகழ்ந்த பல, பல்வேறு கவிஞர்களால் ஏற்கனவே எழுதப் பட்டு விட்டது .. 

  3. இந்த பொண்ணுங்களே இப்படி தன எஜமான் குத்துங்க எஜமான் குத்துங்க…………. அவள் கண்கள்  காட்டிய வித்தைகள் தவறாக புரிந்துகொண்டீர்கள்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *