சர்க்கரை நோய்க்கு ஏற்ற சத்தான சமையல் மற்றும் உணவு வகைகள்-2
புடலங்காய் லாகார்ட்டி
திருமதி காயதரி பாலசுப்ரமணியன்
இதற்கு வேண்டிய பொருட்கள் :
சிறிய புடலங்காய் -2
உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம். அரிசி மாவு/கடலை மாவு 2 டீஸ்பூன்
மல்டி மிக்ஸ் பொடி-தேவையான அளவு.)மல்டி மிக்ஸ் செய்யும் செய்முறை முன்பே கொடுக்கப்பட்டுள்ளது)
தாளிக்க: சிறிது எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி-கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயம்-சிறிதளவு, சீரகம்- கால் டீஸ்பூன்,
செய்முறை:
புடலங்காயை நல்ல நீரில் கழுவி, துடைத்து வைத்துக் கொள்ளவும். காயை நீள வாட்டில், சீவி, உள்ளே உள்ள விதை மற்றும் குடல் பகுதியை நீக்கிவிடவும். நீளவாட்டில் நறுக்கியவற்றை, மீண்டும் மூன்று அல்லது நான்கு தூண்டங்களாக நறுக்கவும். ஒரு குழிவான தட்டில், சிறிது மஞ்சள் தூள், உப்பு, மல்டிமிக்ஸ் பொடி, அரிசி/கடலை மாவு- இவற்றைக் கலந்து , இதனுடன் நறுக்கிய புடலங்காய் துண்டங்களையும் சேர்த்து, மீண்டும் பிசறி அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கனமான வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், இவை அனைத்தையும் போட்டு தாளித்து, புடலங்காயை போட்டு வதக்கி, சிம்மில் மூடி வைத்து விடவும். அவ்வப்போது, புடலங்காயை வதக்கிக் கொள்ளவும். காய் நன்கு வெந்தவுடன், மேற்புறம் சற்று மொறுமொறுப்பாகவும், உள்ளே நன்கு வெந்தும் இருக்கும். இந்த லாகார்ட்டி கலவையில் வடித்த சூடான சாதத்தைக் கலந்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
திருமதி காயதரி பாலசுப்ரமணியன்