சீதாயணம் நாடக நூல் வெளியீடு
சி. ஜெயபாரதன், கனடா
அன்பினிய வல்லமை வாசகர்களே,
வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” எனது “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நாடகம் 2005 ஆண்டில் முன்பு திண்ணையில் தொடர்ந்து வெளியானது.
“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழு துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப வரலாறு இது.
அன்புடன்
சி. ஜெயபாரதன்
http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)
சீதாயணம் (நாடகம்) கிடைக்குமிடம் :
விலை ரூ: 70 (பக்கங்கள் : 76)
Mr. S. P. Murugesan (வையவன் )
Dharini Pathippagam
1. First Street,
Chandra Bagh Avenue,
Mylapore,
Chennai : 600004
Phone: 99401-20341