சிந்தாமல்…
இந்த மண்ணில்
இதுவரை வீழ்ந்த
இரத்தமும் உடல்களும்
மண்ணில் நல்ல
உரமாகியிருக்குமே..
கண்ணீர் உப்புக்கள்
நல்ல
ஊட்டச் சத்தாயிருக்குமே..
இதில்,
இனி முளைக்கும் மனிதனாவது
இரத்தமும் கண்ணீரும்
சிந்தாமலிருப்பானா..
சிந்தாமலிருக்க வைப்பாயா,
சிந்திப்பாய் மனிதனே…!
படத்திற்கு நன்றி
http://www.washingtonpost.com/wp-dyn/content/gallery/2009/05/01/GA2009050101848.html.
மனித மனங்கள் மாசுப் பெட்டகங்கள் ஆகி….இதயங்கள் மனிதம் என்பதை மறந்து போய் விட்ட…இந்த பாலிதீன் நாட்டில் இனி வரும் சந்ததிகள் மீது பரிதாபம்தான் தோன்றுகிறது அய்யா…
உண்மைதான்..
இப்படியே போனால்
இரண்டாயிரத்து இருபதில்,
கலாம் கனவுகண்ட
வல்லரசு பாரதத்தைப் பார்க்க
வருங்கால வாரிசுகள் இருக்குமா…!
-செண்பக ஜெகதீசன்…