அன்புடன் அழைக்கிறோம்
இசைக்கவி இரமணன்
அன்புடையீர்,
வணக்கம். என் இனிய நண்பர்கள் திரு பி. சுவாமிநாதனும் திரு கண்ணன் விக்ரமனும் இணைந்து ஓர் இனிய முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று மாலை இது வரை எழுத்தாளராக அறியப்பட்ட சுவாமிநாதன் பேச்சாளராகிறார். அவருடைய கன்னிச் சொற்பொழிவைத் தொடர்ந்து அவர் எழுதி, கண்ணன் அச்சிட்டுள்ள “மகா பெரியவா” என்னும் அருமையான நூல் வெளியிடப் படுகிறது. படித்து இன்புறவும், பரிசாய்க் கொடுக்கவும், வாழ்க்கைப் பயணம் செல்லவும் உதவும் நூல் இது.
இந்த விழாவை தொகுத்தளிப்பதை என்னுடைய உரிமையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். அனைவரும் வந்திருந்து வாழ்த்துங்கள்.
அன்புடன்,
ரமணன்
இடம்: அயோத்தியா மண்டபம், ஆரிய கௌடா ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை – ௩௩
நாள்: 12.09.2012
INVITATION