விதை இயற்கை அங்காடி – தொடக்க விழா

0

 

விதை இயற்கை அங்காடி (Vidhai Organic Store) – a thamizhstudio network…..
 

தொடக்க விழா:

நாள்: 17-09-2012, திங்கள்

நேரம்: காலை 8 மணியளவில்

இடம்: # 1, ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ், காந்தி நகர், முதல் குறுக்கு தெரு, அடையார், (அடையார் சிக்னல் அருகில்), (அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வரும்போது அடையார் மேம்பாலம் (மேலே ஏறக்கூடாது), அருகில் உள்ள சிக்னலில் இருந்து இடது புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் விதை கடையின் பெயர்பலகை தெரியும்).

திறந்து வைப்பவர்: திரு. சகாயம் IAS அவர்கள்,

சிறப்பு அழைப்பாளர்கள்:

மருத்துவர் கு. சிவராமன் (சித்தா),
மருத்துவர் வெங்கட்ராமன் (ஹோமியோ),
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்,
பூவுலகின் நண்பர்கள் சார்பாக திரு. ஆர்.ஆர். சீனிவாசன்

நண்பர்களே,

நானும், நண்பர்கள் குணாவும், தயாளனும் சேர்ந்து சென்னை அடையாரில் (அடையார் சிக்னல் அருகில்) இயற்கை அங்காடி ஒன்றை தொடங்கவிருக்கிறோம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, ரசாயன உரங்கள் இல்லாமல், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட மளிகைப் பொருட்களை மக்களுக்கு எடுத்து செல்லும் வணிக ரீதியிலான கடைதான் எங்கள் கடை. விதை இயற்கை அங்காடி (Vidhai Organic Store).

இதன் தொடக்க விழா எதிர்வரும் திங்கள் அன்று அடையாரில் (அடையார் சிக்னல் அருகில், ஸ்ருதி அபார்ட்மென்ட்ஸ், காந்தி நகர், முதல் குறுக்கு தெரு) நடைபெறவிருக்கிறது.

திரு. சகாயம் IAS அவர்கள் கடையை திறந்து வைக்கிறார். மருத்துவர் கு. சிவராமன் (சித்தா), மருத்துவர் வெங்கட்ராமன் (ஹோமியோ), பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பூவுலகின் நண்பர்கள் சார்பாக திரு. ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

எப்போதும் போல் எனது பலம் நண்பர்கள்தான். எனவே உங்கள் அனைவரின் வருகையுமே எனக்கு முக்கியம். வந்து கடையில் உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்லுங்கள்.

தொடக்க விழா திங்களன்று காலை 8 மணியளவில் நடைபெறும். விழாவில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காலை உணவு பரிமாறப்படும். (திணை அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு பொங்கல், சாமையில் செய்யப்பட்ட மிளகுப் பொங்கல், பானகம், கொழுக்கட்டை.. இவை அனைத்தும் 100 % இயற்கையானது… உங்கள் காலைப்பொழுதை திங்களன்று எங்களோடு கழியுங்கள் நண்பர்களே..

இனி இதுவும் எங்கள் புதிய மந்திரம்தான்

உணவே மருந்து.. மருந்தே உணவு… பசுமைக்கு மாறுவோம்..

தொடர்புக்கு: 9840698236

 

 
விதை இயற்கை அங்காடியின் இணையம்: http://vidhaiorganicstore.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.