செண்பக ஜெகதீசன்

மலைச்சாரலில்
மந்தையாய் ஆடுகள்,
முட்டி மோதி
மேய்கின்றன புல்லை..

அந்தப் புல்லும்
அதை மேயும் ஆடும்,
அடித்து
அதைத் தின்னும் மனிதனும்
அழிந்து போகிறார்கள்..

அந்த
மலையும் மலைச்சாரலும்
அங்கேதான் இருக்கின்றன-
அடுத்த தலைமுறை
ஆடுகளையும் மனிதனையும்
ஏதிர்நோக்கி…!

ஆனாலும் கவலை-
இந்தத் தலைமுறை மனிதன்
இவற்றையும் அழிக்காமலிருந்தால் சரிதான்…!

 படத்துக்கு நன்றி

http://www.masterfile.com/stock-photography/image/400-04985736/amazing-views-of-Alp-mountains-during-summer                         

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மாறாதது…

  1. மானிட்டரில் காதல் பேசி…
    மெளசில் சில்மிசம் செய்து…
    கீ போர்டில் தாம்பத்யம் நிகழ்த்தி….
    பேஸ் புக்கிலும் டிவிட்டரிலும்
    குடும்பம் நடத்தும் நவீன மனிதனுக்கு
    இயற்கையை காக்கும் அக்கறை
    எப்படி வரும்?

  2. தாத்தா சேர்த்த சொத்தை பேரன் தின்று தீர்த்தான். போய் ஒழியட்டும் பேரனுக்கு சேர்தத தாத்தவை மறந்த இந்த தலைமுறை, இயற்கை ஒன்றும் அவன் தாத்தா வீட்டு சொத்து இல்லை என்பதை எப்பதான்.. எப்படித்தான் உணரப்போகிறார்களோ!

  3. கணினி வாழ்வில், இயற்கையைக்
    காப்பதற்கான
    கவிஞனின் கவலையாய்க்
    கருத்துரை வழங்கிய
    முகில் தினகரன் அவர்களுக்கும்,
    திருமலை சோமு அவர்களுக்கும் என் நன்றி…!
                                                      -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *