பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்” என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.
இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள், உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள். புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது
மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள், பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.
நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in , blackholemedia@gmail.com மின்னஞ்சல்கள் மூலமாகவோ, செல்பேசி: 9600123146, மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம்.
பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.
http://blackholemedia.in/node/211
இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
Dear Ganesan N.
AsikaL. i want to read yur some 5 chapters atleast in yur Vallami issues(published therein) about piramidukal.
so that i can buy a copy. pl. furnish those web..
Pl. furnish to me yur email id imly,
vedham…kaviyogi & kavimamani, Camp at Canada now (res. Chennai)-
பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் இவ்வருடம் நான்காம் பதிப்பைக் கண்டுள்ளது. தாங்கள் கேட்டுக் கொண்டபடி நான் இங்கு ஐந்து அத்தியாயங்களின் லிங்க் இணைத்துள்ளேன்.
http://enganeshan.blogspot.in/2011/06/blog-post_10.html
http://enganeshan.blogspot.in/2011/06/blog-post_15.html
http://enganeshan.blogspot.in/2011/06/blog-post_20.html
http://enganeshan.blogspot.in/2011/07/blog-post.html
http://enganeshan.blogspot.in/2011/07/blog-post_06.html