செண்பக ஜெகதீசன்

கடவுள் எழுதிய கவிதை,
கையும் காலும் முளைத்து
கவினுறு மரமாய்க்
காட்சி தருகிறது..

மண்ணில் அதன் நிழலோவியம்
மனதைக் கவர்கிறது,
கண்ணைப் பறிக்கிறது..

கண்ணை உறுத்துகிறது அது
மனிதனுக்கு-
வெட்டி விறகாக்கிவிட்டு
வேறுவேலை பார்க்கிறானே…!

படத்துக்கு நன்றி

http://www.123rf.com/photo_3556527_bundle-of-logs-stack-up-in-the-forest.html

              

4 thoughts on “இவனுக்கு மட்டும்…

 1. மண்ணை உழுது
  உரம் இட்டு
  நீர்ப் பாய்ச்சி
  பயிரிட்டு
  உண்ணும் மனிதனும்
  ஆடு மாடு அறுத்து உண்டு
  வலை இட்டு மீன் பிடிக்கும்
  மனிதனும்
  இயற்கையின் எதிரியே!
  காடு மலை மேடழித்து
  கட்டிடங்கள் பல கட்டி
  நாடு நகரம்
  பல காணும்
  மனிதனும் இயற்கையின் எதிரியே!
  …..டாக்டர் ஜி. ஜான்சன்.

 2. அன்புடன் டாக்டர் ஜான்ஸன் அவர்கள் வழங்கிய
  ஆழமான கருத்துரைக்கு நன்றி…!

                         -செண்பக ஜெகதீசன்…

 3. இந்த உலகில் உள்ள அனைத்தும் நமக்காகவே படைக்கப் பட்டது என்ற ஆணவம் நமக்கு

 4. அன்புடன் தேமொழி அவர்கள் வழங்கிய
  கருத்துரைக்கு நன்றி…!

                      -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க